கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 23, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜூலை 31

 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

31-07-2023 முதல் 04-08-2023

2.பருவம்

1

3.அலகு

1, 2

4.பாடத்தலைப்பு

முதல் இடைப்பருவத் தேர்வு பாடப்பகுதிகள்

திருப்புதல் வினாக்கள்

 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக.

 கண்ணி என்பதன் விளக்கம் யாது?                            

 வீணையோடு வந்தாள், கிளியே பேசு - தொடரின் வகையைச் சுட்டுக.

“கூவல்” என்று அழைக்கப்படுவது எது?

 நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது?

 கலைச்சொல் தருக Phoneme, Conical Stone

 அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

அ.குழந்தைகள் அனைவரும் சுற்றுலா ............................. (செல்)

.தவறுகளைத் ............................ (திருத்து)                               

 மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

 தன்வினை, பிறவினை - எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

 'புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்' - உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

 சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

 பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?      

உங்களின் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் கால் முளைத்த கதைகள் என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக

திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க

தமிழ்த்துகள்

Blog Archive