கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, July 11, 2023

அரசியல் ஞானி காமராசர் தமிழ்க் கட்டுரை பேச்சுப்போட்டி உரை ARASIYAL GNANI KAMARAJAR TAMIL ESSAY SPEECH

 

அரசியல் ஞானி காமராசர்

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன்நிலம் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தமிழ்த்துகள்

மக்களால் மக்களுக்காக மக்களே ஆளும் நாட்டில் சுயநலமில்லாமல் அரும்பணி செய்த செயல்வீரர் காமராசர். அரசியலுக்கு இலக்கணம் வகுத்த அந்த கர்மவீரரின் அரசியல் பணி தன்னலமற்றது.

ஊதி அணைத்துவிட நானொன்றும் அகல் விளக்கல்ல சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்கு என்று கூறி விருது பட்டியில் உதித்து உலகெலாம் ஒளி வீசியது நம் கருப்புச் சூரியன். தந்தையை இழந்து தாயார் சிவகாமி பாட்டி பார்வதியின் அரவணைப்பில் வளர்ந்தார் காமாட்சி என்கிற காமராஜர். மாமாவின் கடையில் திருவனந்தபுரத்தில் இருந்தார். சுதந்திரக் கனல் இவரைப் பற்றிக் கொண்டது. காங்கிரஸில் சேர்ந்தார். 16ஆம் வயதில் 1919 இல் ஜாலியன் வாலாபாக் படுகொலை எதிர்ப்பு பேரணி மூலம் அவரது அரசியல் வாழ்வு தொடங்கியது. தமிழ்த்துகள்

 கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

தீரர் சத்தியமூர்த்தியை அரசியல் குருவாக ஏற்றார். அண்ணல் காந்தியின் அடித்தொண்டனாக ஒத்துழையாமை இயக்கம், நாகபுரி கொடி போராட்டம், நீல் சிலை அகற்ற போராட்டம், சைமன் குழு எதிர்ப்புப் போராட்டம் வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார் காமராசர். நாடு விடுதலை பெற்றது. சமுதாய சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டார் பெருந்தலைவர்.

 அரசியல் சாணக்கியராக விளங்கினார் ராஜாஜி. மூதறிஞர் ராஜாஜிக்கே சிம்ம சொப்பனமாக விளங்கியவர் கர்மவீரர். 1919 இல் அடிமட்டத் தொண்டனாய் காங்கிரஸில் சேர்ந்த அவர் 1940ல் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆனார். எந்த அரசியல் பின்னணியும் இல்லாத அவர் தம் எளிமை, கடமை உணர்வு, உழைப்பு மற்றும் நேர்மையால் பதவிகள் அவரைத் தேடி வந்தன.

 நிமிர்ந்தால் தலையிடிக்கும் நிற்பதற்கு இடம் இருக்கும் தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

அமைவான ஒரு குடிலில் ஐயா நீ வந்து உதித்தாய்! என்று கவியரசு கண்ணதாசன் கர்மவீரரைப் பாராட்டினார். 1954 ஏப்ரல் 13ஆம் நாள் தமிழக முதல்வராக்கி அழகு பார்த்தனர் தமிழக மக்கள். பாட்டாளிகளின் பிரதிநிதியாய் முதல்வரான காமராசர் மக்கள் நலத் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்தார். தம் பட்டறிவால் அவர் தீட்டிய திட்டங்கள் இன்றைக்கும் ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் உயர பெருந்துணையாய் இருந்து வருகிறது.

1955ல் அனைவருக்கும் இலவசக் கல்வி திட்டம் 1956-ல் இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்து கல்விப் புரட்சி செய்தவர் காமராஜர். அதனால்தான் தமிழக அரசு காமராசரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவித்து நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாட வழிவகை செய்திருக்கிறது. பல்வேறு தொழிற்சாலைகள் அமைத்து உற்பத்தி பெருக்கினார். தமிழ்த்துகள்

நெய்வேலி நிலக்கரித் திட்டம், நீலகிரி கச்சா பிலிம் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில் பெட்டி ஆலை, திருச்சி பெல் நிறுவனம் போன்ற எண்ணற்ற தொழிற்சாலைகள் அவர் காலத்தில்தான் தமிழகத்திற்கு வந்தன. தமிழகத்தின் 75 விழுக்காடு அணைக்கட்டுகள் காமராசர் காலத்தில் கட்டப்பட்டவையே ஆகும். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கீழ்பவானி, வைகை, அமராவதி, சாத்தனூர், புள்ளம்பாடி என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

வரப்புயர நீருயரும்

நீர் உயர நெல்லுயரும் தமிழ்த்துகள்

நெல்லுயரக் குடி உயரும்

குடி உயரக் கோன் உயரும்

கோன் உயரக் கோல் உயரும் என்ற ஔவை மூதாட்டியின் வரிகளை செயலில் வடித்தவர் நம் கர்மவீரர். தான் ஆண்ட ஒன்பது ஆண்டுகளில் அரை நூற்றாண்டு சாதனையைச் செய்தவர் காமராஜர்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

1963ல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆனார் காமராசர். காலா காந்தி என்று வட நாட்டு மக்கள் அவரை அழைத்தனர். ரஷ்யாவிற்கு சென்று சோசலிச கொள்கைகளைப் பரப்பினார். வட இந்திய மக்களின் அன்பையும் பெற்றிருந்த அவர் நினைத்திருந்தால் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பின் அப்பதவியில் அமர்ந்திருக்க முடியும். தமிழ்த்துகள்

ஆனால் இந்திய அரசியலில் தலையெழுத்தையே மாற்றும் அளவுக்கு மக்கள் விரும்பும் தலைவராய் விளங்கிய நம் கர்மவீரர் நேருவின் மறைவுக்குப் பின் லால் பகதூர் சாஸ்திரியையும் அன்னாரது மறைவுக்குப் பின் இந்திரா காந்தியையும் இந்திய பிரதமராக தேர்ந்தெடுத்து கிங்மேக்கர் என்ற பட்டம் பெற்றார்.  தேடி வந்த பதவிகளைக் கூட உதறித் தள்ளிய பெருந்தலைவர் கர்மவீரர் பதவிக்கு பெருமை சேர்த்த  பெருந்தலைவர் ஆனார்.                      தமிழ்த்துகள்

 அரசியலுக்கே இலக்கணம் வகுத்தார் காமராசர். கேபிளான் திட்டப்படி காங்கிரஸின் மூத்த தலைவர்கள் எல்லாம் கட்சிப் பணி ஆற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்கள்பணி செய்வதற்காகச் சென்றுவிட்டார். பொது வாழ்வில் தூய்மை, காந்தியக் கொள்கைகளில் பற்று, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த தாய்மை உள்ளம் இவற்றால் தன்னிகரற்று விளங்குபவர் காமராசர்.                தமிழ்த்துகள்

ஏழைகளின் துயரம் நீங்கவே நான் முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளேன்; இல்லையேல் இப்பதவி எனக்குத் தேவையில்லை என சூளுரைத்தவர் நம் கர்மவீரர்.

 பொன்னை நாடார் பொருளை நாடார் சொத்துதனை நாடார் சொந்தம் தன்னை நாடார் நாடொன்றே நாடி வேறொன்று நாடாதவர் நம் காமராஜ் நாடார்.

கர்மவீரரின் அரசியல் பணிகளைப் போற்றுவோம் அவர் வழி நடந்து அவனி காப்போம்.

                   தமிழ்த்துகள்

 

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive