9th Tamil Model Notes Of Lesson Eru Thaluvuthal, Manimegalai
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
15-07-2024 முதல் 19-07-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
பண்பாடு – உரைநடை
உலகம், கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
ஏறு தழுவுதல்,
மணிமேகலை.
6.பக்கஎண்
64 - 71
7.கற்றல் விளைவுகள்
T-9011 தமிழர்களின் பண்பாட்டு அசைவுகளை உணர்ந்து பின்பற்றுதல்.
T-9012 அறவுணர்வை வெளிப்படுத்தும் வீர விளையாட்டென ஏறுதழுவுதலை
ஏற்றல்.
T-9014 விழாக்கள் பண்பாட்டின் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டு
வருபவை என்பதை உணர்ந்து பங்கேற்றல்.
8.கற்றல் நோக்கங்கள்
தமிழர்தம் பண்பாட்டு அடையாளத்தை உணர்தல்.
9.நுண்திறன்கள்
ஏறுதழுவுதல்
குறித்து அறிதல்.
விழா நிகழ்வுகளைப்
பற்றி அறிதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/01/blog-post_16.html
https://tamilthugal.blogspot.com/2018/08/9jallikattu.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-3-9th-tamil-online-test-aeru.html
https://tamilthugal.blogspot.com/2022/12/9-9th-big-question-answer-jallikattu.html
https://tamilthugal.blogspot.com/2022/12/9-2-9th-big-question-answer-jallikattu.html
https://tamilthugal.blogspot.com/2020/06/manimegalai.html
https://tamilthugal.blogspot.com/2022/05/chithalai-chathanar.html
https://tamilthugal.blogspot.com/2020/06/manimegalai-tamil-online-test-quiz-with.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-3-9th-tamil-online-test-manimekalai.html
https://tamilthugal.blogspot.com/2022/08/9th-tamil-manimegalai.html
https://tamilthugal.blogspot.com/2023/07/3.html
https://tamilthugal.blogspot.com/2023/07/3_8.html
11.ஆயத்தப்படுத்துதல்
தமிழர்
திருநாள் விளையாட்டுகளைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
ஐம்பெருங்காப்பியங்களை வினவி, மணிமேகலையை அறிமுகப்படுத்துதல்.
சல்லிக்கட்டு பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
இலக்கியங்களில்
ஏறுதழுவுதல், தொல்சான்றுகள், பண்பாட்டு அடையாளம், ஏறு தழுவுதலும் தமிழர் அறமும்
குறித்து அறியச் செய்தல்.
மணிமேகலை பாடல் குறித்து விளக்குதல். விழா
குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
பட்டிமண்டபம்
குறித்து விளக்குதல்.
தமிழரின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
ஏறுதழுவுதலின் பெயர்களை மாணவர்களை அறியச் செய்தல்.
விழா
குறித்த கவிதைகளைப் படைத்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – முறையான தொடர் அமைப்பினைக்
குறிப்பிடுக.
அ. தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
ஆ. தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான
இ. தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்
ஈ. தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
பழமணல் மாற்றுமின்; புது மணல் பரப்புமின் இடம் சுட்டிப் பொருள்
விளக்குக.
ந.சி.வி – பட்டிமண்டபம், பட்டிமன்றம் - இரண்டும் ஒன்றா? விளக்கம் எழுதுக.
ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக .
உ.சி.வி – உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திர விழா நிகழ்வுகளுடன்
ஒப்பிடுக.
ஏறு தழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
உங்கள்
ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கான அழைப்பிதழ் ஒன்றினை வடிவமைக்க.
ஏறுதழுவுதல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.