7th Tamil Model Notes Of Lesson India Vanamagan
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
15-07-2024 முதல் 19-07-2024
2.பருவம்
1
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
அணிநிழல் காடு –
விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
இந்திய வனமகன்
6.பக்கஎண்
38 - 41
7.கற்றல் விளைவுகள்
T-707 மழைக்காலங்களில் பசுமையான சூழலை ஏற்படுத்துதல் போன்ற
இயற்கை சார்ந்த தலைப்புகள் அல்லது பிரச்சனைகள் தொடர்பாக தங்கள் தருக்கவியல்
முடிவுகளை அளித்தல்.
8.திறன்கள்
நேர்காணல்
வடிவத்தில் அளிக்கப்பட்ட கருத்துகளைப் படித்துணரும் திறன் பெறுதல்.
9.நுண்திறன்கள்
ஜாதவ் பயேங்
குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/08/2-1-indiya-vanamakan-7th-katturai.html
https://tamilthugal.blogspot.com/2019/07/7-qr-code-video_71.html
https://tamilthugal.blogspot.com/2022/08/1-2-7th-tamil-mindmap-term-1-unit-2.html
https://tamilthugal.blogspot.com/2023/07/1-2.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்களுக்குப் பிடித்த
காடுகள் குறித்து அவர்கள் அறிந்துள்ள தகவல்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
காட்டின் பயன்களை
மாணவர்களைக் கூறச் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
பாம்புகள்
இறந்ததைக் கண்டு காடு உருவாக்க நினைத்த ஜாதவ் பயேங் நேர்காணலை விளக்குதல்.
மூங்கில் மரம் வளர்த்து ஜாதுநாத் அவர்களின் கூற்றுப்படி மண்புழுக்கள், சிவப்புக்
கட்டெறும்புகளைத் தீவில் விட்டு மண்தன்மையை மாற்றினார்.
விதைகளைத் தூவி, பானையில் துளையிட்டு நீர் ஊற்றி மரங்கள் வளர, பறவைகள், முயல்,
மான், காட்டு மாடுகள், யானைகள், பாம்புகள், கழுகுகள், காண்டாமிருகங்கள், புலி
போன்றன வந்து தங்கிய நிகழ்வைக் கூறல்.
காடுகள் குறித்து
மாணவர்களுடன் உரையாடுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். மரங்கள் வளர்க்க விரும்புதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
காட்டின்
சிறப்புகளை அறிந்து வரல்.
உங்கள் பகுதிகளில் உள்ள காடுகளின்
பெயர்களை அறிதல்.
சரணாலயங்கள் குறித்து அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – இந்திய வனமகன் என அழைக்கப்படுபவர் .....................................
ந.சி.வி – ஜாதவ் பயேங்
காட்டை எவ்வாறு உருவாக்கினார்?
உ.சி.வி – உனக்குப் பிடித்த
விலங்குகளையும் அதற்கான காரணங்களையும் கூறு.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திறன் மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
காடுகளின்
படங்களைத் திரட்டுதல்.
யானை குறித்து வருணனையாக 5 தொடர்கள்
எழுதுக.
மரக்கன்று நடுவதன் அவசியத்தைக் கூறு.