கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 16, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு அகழாய்வுகள், வல்லினம் மிகும் இடங்கள், திருக்குறள்

9th Tamil Model Notes Of Lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

22-07-2024 முதல் 26-07-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

பண்பாடு – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

அகழாய்வுகள், வல்லினம் மிகும் இடங்கள், திருக்குறள்.

6.பக்கஎண்

72 - 95

7.கற்றல் விளைவுகள்

T-913 தொல்லியல் எச்சங்களைப் பாதுகாத்தல்.

T-915 பட்டிமன்றம் என்ற கருத்துப்பரிமாற்ற வடிவத்தை நேர்த்தியுடன் பயன்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

அகழாய்வு மூலம் வரலாற்றை உணர்தல்.

திருக்குறள் மூலம் அறக்கருத்துகளை அறிதல்.

9.நுண்திறன்கள்

அகழாய்வு குறித்து அறிதல்.

வலிமிகல் பற்றி அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்





இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/08/9-3-9th-tamil-virivaanam-akazha.html

https://tamilthugal.blogspot.com/2021/12/9th-tamil-akalayvu-virivanam.html

https://tamilthugal.blogspot.com/2020/09/3-akazhayvukal.html

https://tamilthugal.blogspot.com/2021/05/vallinam-mikum-idam-mika-idam.html

https://tamilthugal.blogspot.com/2020/02/9-4-tamil-ilakanam-vallinam-migum-idam.html

https://tamilthugal.blogspot.com/2023/07/3-9th-tamil-teaching-aid-akazhayvukal.html

11.ஆயத்தப்படுத்துதல்

          பட்டிமன்றம் பற்றிக் கூறச் செய்தல்.

          திருக்குறள்களைக் கூறி விளக்கச் செய்தல்.

12.அறிமுகம்

தொல்லியல் பற்றி அறிமுகப்படுத்துதல்.

கீழடி, வெம்பக்கோட்டை அகழாய்வு பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          அகழாய்வுகள் குறித்து பட்டிமன்றம் வழி அறியச் செய்தல். மாணவர்களைப் பட்டிமன்றத்தில் பங்கேற்கச் செய்தல்.

          திருக்குறள், திருவள்ளுவர் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          பட்டிமண்டபம் குறித்து விளக்குதல்.

வலிமிகும் இடங்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.

தமிழரின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          அருகில் நடைபெற்ற அகழாய்வுகளை மாணவர்களை அறியச் செய்தல்.

          திருக்குறளை வாழ்வில் பின்பற்ற முயலுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி.  மிகுதியான் எனத்தொடங்கும் குறளை எழுதுக.

                   தீரா இடும்பை தருவது ............................

          ந.சி.வி. – வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை

குறித்த உங்கள் கருத்துகளைத் தொகுத்துரைக்க.

உ.சி.வி.  நிலம்போல யாரிடம் பொறுமை காக்க வேண்டும்?

          வலிமிகும் இடங்கள் 5 எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          உனக்குப் பிடித்த திருக்குறள்களை விளக்கத்துடன் எழுதுக.

அகழாய்வு குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive