8th Tamil Model Notes Of Lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
22-07-2024 முதல் 26-07-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
ஈடில்லா இயற்கை -
கற்கண்டு, வாழ்வியல்
5.உட்பாடத்தலைப்பு
வினைமுற்று,
திருக்குறள்
6.பக்கஎண்
37-46
7.கற்றல் விளைவுகள்
T-809 – படித்தனவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை
மேலும் சிறப்பாக்குதல்.
8.கற்றல் நோக்கங்கள்
வினைமுற்றுச்
சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்தும் திறன்
திருக்குறள்
அறக்கருத்துகளை அறியும் திறன்
9.நுண்திறன்கள்
தெரிநிலை,
குறிப்பு வினைமுற்றுகள், ஏவல், வியங்கோள் வினைமுற்றுகள் குறித்து உணரும் திறன்.
பெருமைமிக்க திருக்குறளின்
அறக்கருத்துகளை உணரும் திறன்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/08/8-2-8th-tamil-worksheet-with-pdf.html
https://tamilthugal.blogspot.com/2020/01/8-1-2.html
https://tamilthugal.blogspot.com/2021/07/8th-tamil-ilakkanam-vinaimutru.html
https://tamilthugal.blogspot.com/2021/07/2-tamil-ilakkanam-unit-2-vinaimutru-8th.html
https://tamilthugal.blogspot.com/2021/05/2-8th-tamil-kuruvina-vidai-thirukkural.html
11.ஆயத்தப்படுத்துதல்
பெயர்ச்சொற்களின்
வகைகளைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த
திருக்குறள்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
பெயர்,
வினைச்சொற்களைக் கூறி வினைமுற்றுகளை அறிமுகப்படுத்துதல்.
திருவள்ளுவர்
குறித்த குறிப்புகளைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
ஆசிரியர் வினைமுற்று
வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் கூறி மாணவர்களுக்கு விளக்குதல். ஏவல்
வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகளை உணரச்செய்தல்.
திருக்குறள்களை வாசித்து அவற்றின்
பொருள் கூறுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், திருக்குறளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
வினைமுற்றின் வகைகளை அறியச் செய்தல். செய்யுள் வழக்கு, தற்கால வழக்கு குறித்து
அறிதல். திருக்குறளை வாழ்வியலோடு பொருத்தி உணரச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி. – பயனில்லாத
களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் ..............................
வியங்கோள் வினைமுற்று
விகுதிகள் ....................................
ந.சி.வி. – வினைமுற்று என்றால் என்ன?
சான்றோர்க்கு அழகாவது எது?
உ.சி.வி. – நீ அன்றாடம் பயன்படுத்தும் ஏவல் வினைமுற்றுச் சொற்களை எழுதுக.
திருக்குறளின் பெருமைகளை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
குறிப்பு வினைமுற்றுச் சொற்களைத் திரட்டுக.
திருவள்ளுவர் குறித்த தகவல்களையும் திருக்குறளின் பெருமைகளையும் இணையம் மூலம்
அறிதல்.