கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 30, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 9th tamil answer key

 ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

முதல் இடைத் தேர்வு

விடைக்குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

1 8 × 1-8

1. (இ) சிற்றிலக்கியம்

2. (அ) கீழே.

3 (ஈ) புலி

4 (ஈ) அ, இ.

5 (ஆ) வளம்.

6 (அ) ஆறு

7 (ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

8 (இ) ஔவையார்.

 

3 x 2 = 6

9 நான் பேசும் மொழி தமிழ் மொழி.

அது தென் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது.

 

10 தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி.

 

11. நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது, உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.

 

12.    1.        அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும்.

2.       அதனால் அந்நீர்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாயும்.

3.       இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லின் காட்சிக்கு ஒப்பிடப்படுகிறது.

 

2x2 =4

13 அ நீர் மேலாண்மை

ஆ ஒலியன்

 

14. அ திகழ்கிறது

ஆ திருத்தினான்

 

15. அ) ஆறு, கரை, ஓரம்

ஆ. பாய், மரம், கப்பல், பல், கல், பால்.

 

3x3=9

16.

1.மரபுக் கவிதை தற்போது புதுக்கவிதை ஆக ஆகிவிட்டது.

2.காப்பியங்கள் புதினங்கள் ஆகி அவை நாவல்கள் ஆகி சிறுகதை ஒரு நிமிடக் கதை என்பதுவரை புதுமைகள் படைத்த வண்ணம் தமிழ் தன்னைப் புதுப்பித்துக் கொண்டுள்ளது.

3.கணினிக் காலத்திற்கு ஏற்ப தொலை அச்சு, திறன்பேசி, தொடர்வண்டி, மகிழுந்து, மடிக்கணினி என தற்போதுள்ள கண்டுபிடிப்புகளுக்கேற்ப தமிழ்ச் சொற்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது தமிழ் மொழி.

4.கன்னித்தமிழ் கணினித் தமிழாய் இன்னும் பல சாதனைகள் புரியக் காத்திருக்கிறது..

 

17

தன்வினை :

எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன் வினை எனப்படும்.

எடுத்துக்காட்டு - பந்து உருண்டது.

அவன் திருந்தினான்.

பிறவினை :  

எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிற வினை எனப்படும்.

எடுத்துக்காட்டு - உருட்ட வைத்தான்.

அவனைத் திருந்தச் செய்தான்.

 

18 

1.வெட்டப்படும் நாள் வருமென பட்டமரம் வருத்தப்பட்டது.

2.இலை வெந்து கருகியதால், கட்டையெனும் பெயர் பெற்றதால் வருத்தப்பட்டது.

3.பட்டை உடை கிழிந்து அழகு இழந்ததால் வருத்தப்பட்டது.

 

19 

1.தண்ணீரைப் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும்.

2.நம் முன்னோர்கள் கண்டுணர்ந்த மரபார்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

3.நீர்நிலைகளின் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குதல் வேண்டும்.

 

20

1.திராவிட மொழிக் குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2.நடுத் திராவிட மொழிகளுள் ஒன்றான தெலுங்கு 'சுந்தரத் தெலுங்கு' எனப்படுகிறது.

3.மலையாளத்தில் பல்வேறு இலக்கியங்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் எழுதப்பட்டன.

4. கன்னட எழுத்தாளர்கள் ஏழுபேர் ஞானபீட பரிசு பெற்றுள்ளார்கள்.

 

 

2 × 5=10

21

அ,

ஆ,

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

22

அ, வரவேற்பு மடல்

ஆ, நண்பனுக்குக் கடிதம்

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

 

 

1 × 8=8

22 அ, ஆ

(பொருத்தமான விடைகள் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்)

 

அடிபிறழாமல் எழுதுக: 1 X 5-5

25. புறநானூறு

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

உண்டி முதற்றே உணவின் பிண்டம் ;

உணவெனப்படுவது    நிலத்தொடு நீரே!

நீரும் நிலமும் புணரியோர் , ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்தசினோரே!                                   

                                           -   குடபுலவியனார்

தமிழ்த்துகள்

Blog Archive