கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 10, 2025

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆன்ற குடிப்பிறத்தல் ஆகஸ்ட் 17 - 2026

8th tamil model notes of lesson

lesson plan august 17

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

17-08-2026 முதல் 21-08-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

கல்வி கரையில – விரிவானம்.

5.உட்பாடத்தலைப்பு

 ஆன்ற குடிப்பிறத்தல்

6.பக்கஎண்

56-59

7.கற்றல் விளைவுகள்

T-821 படிப்பவர், எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனத்திற்கொண்டு பயன்தருமாறு தம்மைத்தாமே வெளிப்படுத்துதல்.

8.திறன்கள்

'ஆன்ற குடிப்பிறத்தல்' என்னும்   கதையினை உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் கருத்துக் கூறுதல்.

9.நுண்திறன்கள்

'பண்புடைமை' என்னும் தலைப்பிலுள்ள திருக்குறள் கதைகளைப் படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2024/09/blog-post_10.html 

https://tamilthugal.blogspot.com/2024/09/4-pdf.html 

11.ஆயத்தப்படுத்துதல்

திருக்குறள் கதைகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

கல்வியின் பெருமை குறித்து விளக்கி, கதையை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆன்ற குடிப்பிறத்தல் கதை குறித்த தகவல்களை மாணவர்களுக்குப் புரிய வைத்தல். திருக்குறள் கதைகளைக் கூறுதல். நல்ல பண்புகளை மாணவர்களிடம் கேட்டல். நற்குணங்களைப் பட்டியலிடுதல்.

          மாணவர்களுக்குப் பிடித்த குறள்களையும் அதன் கருத்துகளையும் கூறச் செய்தல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கல்வி அறிவு குறித்த கதையை மாணவர்களுக்குக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ..............................

          ந.சி.வி – உனக்குப் பிடித்த குறளை எழுதுக.
          உ.சி.வி – திருக்குறள் கருத்தை உணர்த்தும் கதையை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

அறிவின் பெருமையை விளக்கும் கதைகளை அறிதல்.


தமிழ்த்துகள்

Blog Archive