கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, August 16, 2025

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வினைமுற்று ஆகஸ்ட் 24 8th tamil model notes of lesson

8th tamil model notes of lesson

lesson plan august 24

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

24-08-2026 முதல் 28-08-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

4

4.பாடத்தலைப்பு

கல்வி கரையில - கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

வினைமுற்று

6.பக்கஎண்

60-62

7.கற்றல் விளைவுகள்

T-809 – படித்தனவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.

8.திறன்கள்

வினைமுற்றுச் சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்தும் திறன்

9.நுண்திறன்கள்

தெரிநிலை, குறிப்பு வினைமுற்றுகள், ஏவல், வியங்கோள் வினைமுற்றுகள் குறித்து உணரும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2022/02/viyankol-vinaimutru-tamil-ilakanam.html 

https://tamilthugal.blogspot.com/2021/07/8th-tamil-ilakkanam-vinaimutru.html 

https://tamilthugal.blogspot.com/2021/07/2-tamil-ilakkanam-unit-2-vinaimutru-8th.html 

https://tamilthugal.blogspot.com/2020/01/8-1-2.html 

11.ஆயத்தப்படுத்துதல்

பெயர்ச்சொற்களின் வகைகளைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

பெயர், வினைச்சொற்களைக் கூறி வினைமுற்றுகளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆசிரியர் வினைமுற்று வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் கூறி மாணவர்களுக்கு விளக்குதல். ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகளை உணரச்செய்தல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், திருக்குறளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

வினைமுற்றின் வகைகளை அறியச் செய்தல். செய்யுள் வழக்கு, தற்கால வழக்கு குறித்து அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – வியங்கோள் வினைமுற்று விகுதிகள் ....................................

          ந.சி.வி – வினைமுற்று என்றால் என்ன?

          உ.சி.வி – நீ அன்றாடம் பயன்படுத்தும் ஏவல் வினைமுற்றுச் சொற்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

குறிப்பு வினைமுற்றுச் சொற்களைத் திரட்டுக.


தமிழ்த்துகள்

Blog Archive