7th tamil model notes of lesson
lesson plan august 17
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
17-08-2026 முதல் 21-08-2026
2.பருவம்
1
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
நாடு அதை நாடு – கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்
6.பக்கஎண்
60 - 64
7.கற்றல் விளைவுகள்
T-720 பல்வேறு
பாடப்பொருள்களைப் பல்வேறு நோக்கங்களுக்காக எழுதும்பொழுது, பொருத்தமான
சொற்கள், தொடரமைவுகள், சொற்றொடர்,
மரபுத்தொடர், நிறுத்தக்குறிகள் மற்றும் பிற இலக்கணக்கூறுகளைப்
(காலம், பெயரடை, இணைச்சொற்கள்)
பொருத்தமாகப் பயன்படுத்துதல்.
T-703 தாம் பார்த்த
ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தை தம் சொந்த சொற்களில்/ சைகை மொழியில்
வெளிப்படுத்தல்.
8.கற்றல்
நோக்கங்கள்
மொழியில் உள்ள எழுத்துகள் சொற்கள் ஆகியவற்றின் கட்டமைப்பை
அறிந்து பயன்படுத்துதல்.
9.நுண்திறன்கள்
பகுபத உறுப்புகள் குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/08/2-2-pakupatham.html
https://tamilthugal.blogspot.com/2020/09/tamil-ilakkanam-orezhuthu-orumozhi.html
https://tamilthugal.blogspot.com/2020/06/7-2-2-7th-tamil-ilakanam-pahupatham.html
https://tamilthugal.blogspot.com/2019/10/7-2_44.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_13.html
https://tamilthugal.blogspot.com/2022/11/2-2-7th-tamil-mindmap-term-2-unit-2_7.html
https://tamilthugal.blogspot.com/2026/05/1_0862923974.html
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_33.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த ஓரெழுத்து ஒருமொழிகளைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
பதம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
பகுபதம், பகாப்பதம் குறித்து விளக்குதல். ஓரெழுத்து ஒரு
மொழிகளை விளக்குதல். பகுபத உறுப்புகளை அறிமுகம் செய்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
பதம் குறித்துக் கூறுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – பெயர்ப்பகுபதம்
.............................. வகைப்படும்.
எழுதினான் என்பது
....................................
ந.சி.வி – பதத்தின் இரு வகைகள் யாவை?
உ.சி.வி – ஓரெழுத்து ஒருமொழிகளைப் பொருளுடன் எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பகுபதம் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


