கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, November 03, 2023

பேரிடர் மேலாண்மை தமிழ்ப் பேச்சு கட்டுரை

 Disaster management Tamil Essay Speech Competition - Peridar Melanmai tamil katturai pechu potti

 

பேரிடர் மேலாண்மை

அன்னைத் தமிழே அருளோவியமே, என்னை இங்குப் பேச வைத்த ஏந்திழையே! உன்னை வணங்கித் தொடர்கிறேன் அருள்வாய் தாயே!                     தமிழ்த்துகள்

சூரியக் குடும்பத்தில் உயிர்க்கோளம் என்று அழைக்கப்படுவது பூமி மட்டுமே. இதில் சுமார் 700 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றோம். இவர்கள் அனைவரின் உயிரும் விலை மதிக்க முடியாத ஒன்று ஆகும். எதனை இழந்தாலும் சரி செய்து விடலாம். மனித உயிர்களை இழந்து விட்டால் அவற்றைத் திரும்பப்பெற முடியாது. ஓரறிவு படைத்த தாவரங்கள் முதல் ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை தாங்கி நிற்கும் இந்தப் பூமி பல்வேறு பேரிடர்களைச் சந்தித்து வருகிறது.                                            தமிழ்த்துகள்

மனிதன் தன் வசதிக்காக பூமியை மாசுபடுத்துகிறான். இந்த மாசினால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்து மனித உயிர்கள் அழியும் வண்ணம் புவி வெப்பமயமாதல் என்ற நிகழ்வு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வருகிறது. இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மனிதன் குளோரோ புளோரோ கார்பன் பயன்படுத்தி குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறைகளில் சொகுசாக வாழ்ந்து வருவது விந்தையாக உள்ளது.              தமிழ்த்துகள்

உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன. அதில் பல்வேறு நாடுகள் உள்ளன. பல்வேறு மொழிகள் பேசும் அத்தனை மனிதர்களுக்கும் உணர்வு ஒன்றுதான். வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாத மனிதனே இவ்வுலகில் இல்லை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட நிலையில் பின்வரும் பேரிடர்களால் மகத்தான மனித உயிர்கள் இழப்பைச் சந்திக்கின்றன.             தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

வெள்ளம், வறட்சி, புயல், எரிமலை, நிலநடுக்கம், சுனாமி, நிலச்சரிவு, பனிச்சரிவு, மின்னல் மற்றும் இடி காரணமாக ஏற்படும் பேரிடர்களில் இருந்து மனித உயிர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமையாக இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் பல்வேறு எச்சரிக்கைகள் விடுத்தபோதும் தாதுக்களை வெட்டி எடுத்தல், அணுசக்தி சோதனை செய்தல் மற்றும் பாதாள ரயில் சேவைக்காக மனிதன் புவியைக் குடைந்தபடி தான் இருக்கிறான். அதிலும் நியூக்ளியர் சோதனை என்று சொல்லப்படக்கூடிய சோதனைக்காக இயற்கையில் பசுமை போர்த்தி இருக்கும் மலைமுகடுகளைக் குடைந்து அவன் போடும் துளைகள் பல்வேறு இடர்பாடுகளை அவனுக்குத் தரும் என்பது ஏனோ தெரியவில்லை.                                                            தமிழ்த்துகள்

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய் என்கிறார் திருவள்ளுவர். ஆம்! வருங்காலத்தில் வரக்கூடிய இடர்பாடுகளைப் பற்றிய அறிவு இல்லாமல் இன்று செயல்படும் மனிதன் மிகப்பெரிய பேரழிவைச் சந்திப்பான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆறாம் அறிவான பகுத்தறிவைக் கொண்ட மனிதனால் தான் இப்படிப்பட்ட பேரழிவுகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை. ஆனால் ஐந்தறிவு கொண்ட பறவைகளும் மிருகங்களும் புவியின் அதிர்வுகளைக் கொண்டு பாதிப்பு ஏற்படக்கூடிய இடத்தில் இருந்து நகர்ந்து விடுகின்றன. தமிழ்த்துகள்

 எடுத்துக்காட்டாக 2004 டிசம்பர் 26 ஆம் நாள் ஏற்பட்ட சுனாமியைப் பற்றிச் சொல்லலாம். உலகமெங்கும் 2 லட்சத்து 29 ஆயிரத்து 866 பேர் உயிரிழந்த கொடுமை இந்தச் சுனாமியால் நடந்தது. இந்தோனேசியா சுமத்ரா தீவுக்கு அருகில் 9 முதல் 9.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கடலில் 30 மீட்டர் உயரம் அதாவது 100 அடி உயரத்திற்கு அலை எழுந்தது.                      தமிழ்த்துகள்

 இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவுகள், தாய்லாந்து மற்றும் இந்தியக் கடற்கரைகள் இதனால் பாதிக்கப்பட்டன. நம் தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்தில் மட்டும் சுமார் 6000 பேர் தம் உயிரைப் பறிகொடுத்தனர். இந்தோனேசியாவில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 736 பேர் இறந்துவிட்டனர். 37 ஆயிரம் பேரைக் காணவில்லை.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்று நாம் எவ்வளவுதான் இறைவனை வேண்டி வழிபட்டாலும் இப்படிப்பட்ட பேரிடர்களை நமக்குக் கண்டுபிடித்துச் சொல்வதற்குத் தொலைதொடர்பு வானிலை முன்னறிவிப்பு, தரைத்தள போக்குவரத்து, பொறியியல் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம், கடல் அறிவியல், வானவியல் மற்றும் பருவநிலை மாற்றம் வறட்சி மேலாண்மை இத்தனை துறைகள் இருந்தும் நமக்கு உதவ முடியவில்லை என்ற ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது.                               தமிழ்த்துகள்

நம் நாடு மட்டுமல்ல, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, இங்கிலாந்து, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து போன்ற நாடுகள் இந்த சுனாமியால் பாதிக்கப்பட்டன. சுனாமி மட்டும் தானா நமக்குப் பேரிடர் என்று கேட்டால் பெரும்பாலான தமிழர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் லெமூரியா கண்டத்தை விழுங்கியது சுனாமி தானே.

 பூம்புகார் துறைமுகத்தை நாம் இழந்தது சுனாமியால் தான் என்பதை எல்லாம் அறியும்போது, தனுஷ்கோடி மட்டுமே சுனாமி பாதித்ததன் அடையாளச் சின்னமாக ராமேஸ்வரம் தீவில் நமக்காகக் காட்சி தந்து கொண்டிருக்கிறது. இதைப் பார்த்தாலே நமக்கெல்லாம் பதறுகிறதே ஏன்?    தமிழ்த்துகள்

இதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?

 2005 ஆம் ஆண்டு மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதில் 11 அத்தியாயங்களும் 19 பிரிவுகளும் உருவாக்கப்பட்டு உள்ளன. மாநிலங்களவையில் நவம்பர் 28 இல் இச்சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் டிசம்பர் 12ஆம் நாள் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. பேரிடர்களான கொரோனா போன்ற தொற்று நோய்கள் சமீபத்தில் உலகை உலுக்கியது நமக்கெல்லாம் ஒரு பாடமாகும்.

சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற வற்றாத ஆறுகளைக் கொண்ட இந்தியா, அதில் பல்வேறு வெள்ளப்பெருக்கைச் சந்தித்து உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறது. நம்முடைய நாட்டில் நடைபெற்ற இயற்கைப் பேரழிவான போபால் விஷவாயுக் கசிவு நமக்கு மறக்க முடியாத அழிவைத் தந்து இருக்கிறது. ஆம்! யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் மீத்தேன் ஐசோ சயனைடு கசிவால் சுமார் ஐந்து லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 1984 டிசம்பர் மூன்றில் நடைபெற்ற இப்பேரழிவு வேதிப் பொருள்களால் இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவு ஆகும்.                                       தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

தேசிய பேரிடர் மேலாண்மை முகமை மாநில மற்றும் மாவட்ட அளவிலும் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இவை புவியின் காலநிலை வேறுபாடு, சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு, மக்கள்தொகைப் பெருக்கம், நகரமயமாதல், தொழிற்சாலைப் பெருக்கம் இவற்றின் மூலமாக ஏற்படக்கூடிய பல்வேறு இயற்கைப் பேரிடர்களை நேரடியாக எச்சரிக்கை செய்கிறது. பேரிடர் காலங்களில் களப்பணி ஆற்றுகிறது. மீட்பு பணியைச் செய்வதோடு முதலுதவி செய்கிறது. அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரமைக்க முன் வருகிறது.                                                                                            தமிழ்த்துகள்

மாநில அளவில் தலைமைச் செயலரைத் தலைவராகக் கொண்டு நீதித்துறைச் செயலர், பொதுப்பணித்துறைச் செயலர், நெடுஞ்சாலைத்துறைச் செயலாளர், உள்துறைச் செயலர் இவர்களை உறுப்பினராகக் கொண்ட மாநில பேரிடர் மேலாண்மைக் குழு இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சகம் இப்பணியைச் செவ்வனே செய்து வருகிறது. தமிழ்த்துகள்

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறை என்று வைக்கப்படும்

ஆம்! அச்சம் இல்லாத மனித வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய அரசு தான் மக்கள் போற்றும் அரசாக இருந்து வருகிறது. தமிழ்த்துகள்

1993 இந்தியாவின் லத்தூரில் ஏற்பட்ட பூகம்பம், 1999இல் ஒரிசாவில் ஏற்பட்ட சூறாவளி, 2001 இல் குஜராத் பூச் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் இவையெல்லாம் நம் பாரத தேசம் சந்தித்த பேரிடர்கள் ஆகும். தமிழ்த்துகள்

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநில மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுக்களின் உதவியோடு நாம் இத்தகைய பேரிடர்களை அணுக வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. தனி நபர், குழு, சமூகம் என்று மூன்று நிலைகளிலும் நம்முடைய ஒத்துழைப்பு, பேரிடர் காலங்களில் இருக்க வேண்டும்.                                                தமிழ்த்துகள்

ஒரு கை தட்டினால் ஓசை வராது, தனி மரம் தோப்பாகாது!

தட்டுங்கள் உங்கள் கைகளை, காட்டுங்கள் உங்கள் ஆதரவை!             தமிழ்த்துகள்

ஊர் கூடித் தேர் இழுத்தால் தான் அது நிலைக்கு வந்து சேரும். அனைவரும் பேரிடர் குறித்த விழிப்புணர்வைப் பெறுவோம் மனித உயிர்களைப் பாதுகாப்போம்!

-        கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199              தமிழ்த்துகள்

 

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive