6th tamil model notes of lesson
lesson plan august 18
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
2.பருவம்
1
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
கண்ணெனத் தகும் –
விரிவானம்
5.உட்பாடத்தலைப்பு
நூலகம் நோக்கி
6.பக்கஎண்
51-54
7.கற்றல் விளைவுகள்
T-617 செய்தித்தாள்கள், இதழ்கள், கதைகள், இணையத்தில் காணப்படும் தகவல்கள், கட்டுரைகள் போன்றவற்றைப் படித்துப் புரிந்துகொண்டு தமது
விருப்புவெறுப்புகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துதல் (பொது எழுத்துமுறை
அல்லது பிரெயிலி எழுத்துமுறை).
8.கற்றல் நோக்கங்கள்
நூலகம் செல்லும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல்.
9.நுண்திறன்கள்
பல்வேறு
ஊடகங்களில் படித்துப் புரிந்துகொண்ட கருத்துகள் சார்ந்து தன்னுடைய
விருப்புவெறுப்புகளை வெளிப்படுத்துதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/10/2_22.html
https://tamilthugal.blogspot.com/2022/10/2-1-6th-tamil-mindmap-term-2-unit-1_18.html
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_8.html
https://tamilthugal.blogspot.com/2018/10/6-qr-code-video_47.html
11.ஆயத்தப்படுத்துதல்
நூலகம் குறித்து
மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
அண்ணா நூற்றாண்டு
நூலகம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
நூலகத்தின்
எட்டுத் தளங்களைக் கூறி மாணவர்களுடன் கலந்துரையாடல். நூலகத்தின் முக்கியத்துவத்தைக்
கூறுதல்.
நடமாடும் நூலகம் குறித்து விளக்குதல். மாணவர்கள் படித்த புத்தகம் குறித்துக்
கூறச் செய்தல்.
மனவரைபடங்கள்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள்
ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், நூலகம் குறித்து உள்வாங்குதல், வாசித்துப்
பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
நூலகம் செல்லும் பழக்கத்தை, வாசிக்கும் வழக்கத்தை மாணவர்களிடம் உருவாக்குதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– நூலகவியலின் தந்தை எனப்படுபவர் ..............................
ந.சி.வி – அண்ணா நூற்றாண்டு நூலகம் குறித்து நீ அறிந்தவற்றைக் கூறுக.
உ.சி.வி – நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த புத்தகம்
குறித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
உங்கள் வீட்டில் நூலகம் உருவாக்க, உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் 5 எழுதுக.
நூலகம் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


