பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
01-09-2025. திங்கள்
திருக்குறள் :
பால்: பொருட்பால் ;
இயல்: குடியியல் ;
அதிகாரம்: பண்புடைமை ;
குறள் எண் : 682.
குறள் :
அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க் கின்றி யமையாத மூன்று.
விளக்கம் :
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.
பழமொழி :
விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு அல்ல.
Whenever you fall, it is to rise and not to weep.
இரண்டொழுக்க பண்புகள்:
1 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
2 எனவே அறிவைப் பாதிக்கும் வகையில் ஆத்திரப் பட மாட்டேன்.
பொன்மொழி :
நீ எதை நினைக்கிறாயோ அதுவே நீ ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் அவ்வாறே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமை உடையவனாக நினைத்தால் வலிமை படைத்தவனாக ஆகிவிடுவாய்.
சுவாமி விவேகானந்தர்.
பொது அறிவு :
01. உலக வங்கியின் தற்போதைய தலைவர் யார்?
திரு.அஜய் பங்கா -Mr.Ajay Banga
02. வைனு பாப்பு மத்திய வானியல் ஆய்வகம் தமிழ்நாட்டில் எங்குள்ளது?
ஜவ்வாது மலை காவலூர்திருப்பத்தூர்
Javadhu Hills Kavalur Thirupathur
English words :
incredible extremely good, A, 2
Grammar Tips: When to use "of" and "off"
OF
1. To show possession:
Ex: A Friend OF mine
2. To state what something is made of
Ex: A table made OF wood
3. To show what something contains
Ex: A jar of milk
OFF
1. To show movement away from a place
Ex: The dog runs OFF
2. To indicate separation Ex: "His hat fell OFF"
3. To form phrasal verbs
Ex: shut the water OFF
4. Describe disconnection
Ex: I worked on and OFF as a waitress."
அறிவியல் களஞ்சியம் :
வியன்னாவைச் சேர்ந்த பிரான்ஸ் மெஸ்மர் (Franz Mesmer) முதலாவதாகத் தரவு துயில் நெறியை மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தினார். அவருடைய தரவு துயில் உத்தி (technique) ஆற்றல் வசியம் (Mesmerism) என அறியப்பட்டிருந்தது.
நீதிக்கதை - சிங்கமும் கழுதைப்புலியின் பங்கும்
அன்று ஒரு நாள் சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. அடுத்தநாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதைப் புலியோ, நீ ஏன் குடலை மட்டும் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்கு கேட்கவில்லையா என்று கேட்டது. பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும் என்றது குட்டி கழுதைப்புலி.
அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு ஏன் இங்கே வந்தாய்? என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி பயந்து தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்.
குடலை சிங்கத்திடம் கொடுத்துவிட்டுத் திரும்பிய கழுதைப்புலியிடம் பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்துவிட்டு வருகிறீர்களே? என்று கேட்டது குட்டி கழுதைப்புலி. மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கிவிட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டிவிட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக என்றது தாய் கழுதைப்புலி.
நீதி : அடாவடிக்காரனிடம் சண்டையிடுவதைவிட சமயோசிதமாக நடப்பது நல்லது.
இன்றைய செய்திகள் - 01.09.2025
*தமிழக சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம்
* ஏமனில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹூத்தி பிரதமர் படுகொலை
*அதிகரித்து வரும் முதலீட்டு மோசடிகள்: போலி லிங்க்-களில் இருந்து பாதுகாப்பாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்
விளையாட்டுச் செய்திகள்
*கெய்ல், பொல்லார்டுக்கு அடுத்தபடியாக டி20 போட்டிகளில் 14,000 ரன்கள் குவித்து அலெக்ஸ் ஹேல்ஸ் சாதனை
ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி: 50 தங்க பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது இந்தியா
அமெரிக்க ஓபன் டென்னிஸ்:
சின்னர், கோகோ காப் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்.
Today's Headlines - 01.09.2025
* Venkatraman appointed as Tamil Nadu DGP in charge of law and order.
* Houthi PM killed in Israeli airstrike in Yemen.
* Investment scams on the rise: Police advise being safe from fake links.
SPORTS NEWS
Alex Hales becomes the second player to score 14,000 runs in T20 after Gayle and Pollard
Asian Shooting Championship: India creates history by winning 50 gold medals
US Open Tennis: Sinner, Coco Gabe advance to the 4th round.
Prepared by Covai women ICT போதிமரம்
