கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, August 21, 2025

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-08-2025. வியாழன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

21-08-2025. வியாழன் .

திருக்குறள் :

பால்: அறத்துப்பால் ; 

இயல்: துறவறவியல்; 

அதிகாரம் : கொல்லாமை ; 

குறள் எண்: 322.

குறள் :

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

விளக்கம் :

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

பழமொழி :

உன் மனப்பாங்கே உன்னுடைய மிகப்பெரிய சக்தி.

Your mindset is your superpower.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நல்ல புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.

2. எனவே நல்ல புத்தகங்களை தேடிப் படிப்பேன்.

பொன்மொழி :

பிறர் மிகைப்படுத்தி கூறுவதற்கு முன் உன் குற்றத்தை ஒப்புக் கொள்.

அரிஸ்டாட்டில்.

பொது அறிவு :

01. சிரவணபெலகோலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிற்பம் எந்த மாநிலத்தில் உள்ளது?

கர்நாடகா Karnataka

02. இந்தியாவை ஏறக்குறைய இரண்டாகப் பிரிக்கும் அட்சரேகை எது?

23°30′ கடக ரேகை 

23°30' Tropic of cancer"

English words :

rapport a friendly relationship in which people understand each other very well. ஒத்துணர்வு மிக்க நட்புறவு

Grammar Tips:

Mohan is elder than suji

In this sentence elder should be used for our relatives or same family

While using 'elder 'we should use' to'

Persons comparing not limited to the family we can use 'older' While using 'older 'we should use 'than'

Mohan is elder to suji (same relationship) Mohan is older than suji (outer relationship)

அறிவியல் களஞ்சியம் :

சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை.

ஆகஸ்ட் 21 - உசைன் போல்ட் அவர்களின் பிறந்தநாள்

* உசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் (Usain St. Leo Bolt, பிறப்பு: ஆகத்து 21, 1986) ஜமைக்காவில் பிறந்த தடகள ஆட்டக்காரர்.

* 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 9.69 நொடி நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.

* 2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் (100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ) நடப்பு முதன்மை வீரன் (சாம்பியன்), ஒன்பது முறை உலக முதன்மை வீரன், ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தையங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர், இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலக சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டைச் சாரும்.

நீதிக்கதை -பிச்சைக்காரனும் தங்க நாணயமும்

ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் வீடு வீடாக உணவுக்காக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு இருந்தான். ஒரு பழைய கோணிப்பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப்போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் அந்த வீட்டின் முன்னே போய் நின்று வீடு மிகப் பெரியது, ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழப்பார்கள் என்று சொன்னான்.

இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப்படமாட்டேன்! என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.

நான் உனக்கு தங்க நாணயங்கள் கொடுத்து உதவுகிறேன் என்றது தேவதை. பிச்சைக்காரன் உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகிவிடும் என்று சொல்லியது. பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை கோணிப்பை நிரம்பியதும் தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது.

உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே? என்றது அதிர்ஷ்ட தேவதை. போதாது. இன்னும் வேண்டும் என்றான் பிச்சைக்காரன். அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்துவிட்டு, உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது என்றது. பிச்சைக்காரன் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றான். அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் கொடுத்தது. மறுவினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.

நீதி : கிடைத்ததை வைத்து வாழவேண்டும். பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.

இன்றைய செய்திகள்

21.08.2025

* ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

*தமிழ்நாடு (Semiconductor) குறைக்கடத்தி மிஷன் 2030 ன் கீழ், ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 100 ஏக்கரில் தொழில் பூங்காவை தமிழக அரசு உருவாக்க உள்ளது.

* இந்தியா - சீனா இடையே விமான சேவை, எல்லை வர்த்தகத்தை தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல்

விளையாட்டுச் செய்திகள்

சவுதி சூப்பர் கப் கால்பந்து: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரொனால்டோவின் அல் நசார் க்ளப்

*ஆசிய கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார்.

Today's Headlines 21.08.2025

* The Union Cabinet has approved the bill to regulate online gambling. The bill has been tabled in Parliament.

* Under the Tamil Nadu semiconductor mission 2030, the Tamil Nadu government is planning to develop an industrial park on 100 acres in Palladam, Tiruppur district, at an estimated cost of Rs. 500 crore, to provide employment to 1,000 people.

*India-China agree to resume air services, border trade

SPORTS NEWS

Saudi Super Cup Football: Ronaldo's Al Nassr Club advances to final.

The Indian team led by Suryakumar Yadav has been announced for the Asia Cup. Shubman Gill has been named as the vice-captain.

Prepared by

Covai women ICT_போதிமரம்

தமிழ்த்துகள்

Blog Archive