கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 31, 2025

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 8

6th tamil model notes of lesson

lesson plan september 8

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

08-09-2025 முதல் 12-09-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

1,2,3

4.பாடத்தலைப்பு

1,2,3 முழுவதும்

திருப்புதல் வினாக்கள்

          முதல் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                

1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ...................

அ.ஊக்கமின்மை              ஆ.அறிவுடைய மக்கள்       இ.வன்சொல்          ஈ.சிறியசெயல்

2. நாம் .............................. சொல்படி நடக்க வேண்டும்.

அ.இளையோர்                   ஆ.ஊரார்                          இ.மூத்தோர்             ஈ.வழிப்போக்கர்

3. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.....

அ.பசி+இன்றி                     ஆ.பசி+யின்றி                   இ.பசு+இன்றி           ஈ.பசு+யின்றிதமிழ்த்துகள்

4. தொன்மை என்னும் சொல்லின் பொருள் ...................

அ.புதுமை                        ஆ.பழமை                        இ.பெருமை            ஈ.சீர்மை

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

5. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல் .........................   தமிழ்த்துகள்

6. இந்தியாவின் பறவை மனிதர் .........................

இ. பொருத்துக.

7. விளைவுக்கு                 -        பால்

8. அறிவுக்கு                     -        வேல்

9. இளமைக்கு                  -        நீர்

10. புலவர்க்கு                    -        தோள்                              தமிழ்த்துகள்


ஈ. ஓரிரு சொற்களில் விடையளிக்க. 

11. தமிழ் ஏன் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது?

12. முன்பெல்லாம் மழைக்காலம் எவ்வாறு இருக்கும்?                       தமிழ்த்துகள்

13. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம்பெயர்கின்றன?

14. எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது? தமிழ்த்துகள்

15. நாம் யாருடன் சேரக்கூடாது?    

16. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை? தமிழ்த்துகள்

17. மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.          

18. வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை? தமிழ்த்துகள்

19. சமூக வளர்ச்சிக்கும் நீருக்கும் உள்ள தொடர்பு யாது?தமிழ்த்துகள்

20. குருவிகள் ஏதிலிகளாக ஆனதற்குக் காரணம் என்ன? 

21. அஃறிணை, பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது? தமிழ்த்துகள்

22. காமராசரின் கல்விப்பணிகள் குறித்து எழுதுக.                   

தமிழ்த்துகள்

Blog Archive