கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, September 07, 2021

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் பத்தாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 16 விடைக்குறிப்பு 10th tamil Answer key activity 16

 புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

பத்தாம் வகுப்பு 

தமிழ் 

செயல்பாடு 16 

விடைக்குறிப்பு

பத்தியைக் கடிதமாக மாற்றி எழுதுக.

பெருந்தொற்று காலத்தில் தமிழர் மருத்துவத்தின் மகத்துவத்தினை உணர்த்தி நண்பனுக்குக் கடிதம்

                                7, பாரதியார் தெரு,                                         மதுரை.

                                                                     26-07-2021.

அன்புள்ள நண்பா,

நானும் என் பெற்றோரும் இங்கே நலமாக இருக்கிறோம். அதுபோல் அங்கு நீயும் உன் பெற்றோரும் நலமாக இருக்கிறீர்களா ? நான் இங்கு நன்றாகப் படிக்கிறேன். நீயும் அங்கு நன்றாகப் படிப்பாய் என்று எண்ணுகிறேன்.

தற்போதுள்ள பெருந்தொற்று காலத்தில் நாம் நம் தமிழர் மருத்துவத்தினை அவசியம் அறிந்திருக்க வேண்டும். பழந்தமிழ் இலக்கியங்களில் மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம், யோகம் முதலிய கலைகளைத் தமிழர் அறிந்திருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வாழ்வியல் நோய்களைப் போக்க உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

சித்த மருந்துகள் பக்கவிளைவற்றவை. சுற்றுச்சூழலைச் சிதைக்காது. நோய்நாடி நோய் முதல்நாடி என்ற திருக்குறளின்படி நோயின் காரணிகளையும் கண்டறிந்து நோயில்லா மனிதனாக்குகிறது. தமிழர் மருத்துவம் தனித்தன்மை கொண்டது.

என் கடிதம் கண்டு நீ அவசியம் பதில் எழுத வேண்டும். உன் பதில் மடலைக் காண ஆவலோடு காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,

உன் அன்புள்ள தோழன்,

 அ.முகிலன்.

உறை மேல் முகவரி

திரு.ப.எழிலன்,

5, கம்பர் தெரு,

சென்னை.

தமிழ்த்துகள்

Blog Archive