போட்டு வைத்தாய் குப்பைகளை
பொல்லா நோய்களைப் புகவே விட்டு
வேட்டு வைத்தாய் உயிர்களுக்கே!
பேச்சும் செயலும் சுத்தம் என்று
பேசி விட்டால் நீங்கிவிடுமா?
மூச்சுக்காற்றை உன்னால் என்றும்
விலைக்கு வாங்க முடிந்திடுமா?
திடமாய்த் திரவமாய்ச் சேரும் கழிவை
உரமாய் மாற்ற முடியாதா?
உடலும் மனமும் கோயில் என்று
உங்களுக்குத் தெரியாதா?
மட்கும் குப்பை மட்காக் குப்பை
தனியே பிரித்து எடுத்து விடுவாய்!
மறுசுழற்சி செய்தே அதனை
மறுபடியும் பயன்படுத்திடுவாய்!
நெகிழிக் குப்பை மட்காதென்று
நீண்ட பேரணி நடத்திடுவோம்!
பழகிப்போனால் மாற்ற முடியா
தென்னும் கருத்தை மாற்றிடுவோம்!
துணிப்பையும் சணல் பையும்
துவைத்தே பயன்படுத்திடுவோம்!
தனிமனிதர் ஒவ்வொருவரையும்
தூய்மை பேண அழைத்திடுவோம்!
பழுதாய்ப் போன பூமித் தோலைப்
புதிதாய்த் தைக்க முயன்றிடுவோம்!
விழுதாய் இறங்கிடும் வீர இளைஞரைத்
தொழுதே இப்பணிக்கு அழைத்திடுவோம்!
இதுவோ நம்மால் முடியும் என்று
ஏன் தயக்கம் உனக்குள்ளே?
இதுவும் முடியும் ஒரு நாள் விடியும்
இளைஞர் கூட்டம் நம் கைக்குள்ளே!
மு.முத்துமுருகன், கல்லூரணி.