ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 10
விடைக்குறிப்பு
1.பின்வரும் படங்கள் உணர்த்தும் கருத்தை ஒரு பத்தி அளவில் எழுதுக.
பால் நினைந்தூட்டும் தாயின் அன்பு பசுவின் மடியில். இரக்கத்திற்கும் ஈகைக்கும் வறுமை தடையில்லை. அன்பு சுயநலம் இல்லாதது ஆம்! அதன் நிழலும் கூட. அன்புடையார் என்பும் உரியர் என்கிறார் திருவள்ளுவர். காக்கை கரவா கரைந்துண்ணும் என்பதைக் கண்டு நாமும் ஊருடன் கூடி வாழ வேண்டும்.
2.நான் விரும்பும் தலைவர் காந்தியடிகள் - என்னும் கட்டுரைத் தலைப்புக்கேற்ற உட்தலைப்புகள், பழமொழிகள், முழக்கத்தொடர்கள் ஆகியவற்றை எழுதுதல்.
நான் விரும்பும் தலைவர்- முன்னுரை - தாயார் மீது அன்பு- இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம்- தென்னாப்பிரிக்காவில் இனப் போராட்டம்- காங்கிரஸ் பேரியக்கத்தில் காந்தியடிகள்- அகிம்சை வழி அறப்போராட்டங்கள்- செய் அல்லது செத்து மடி-நவகாளி யாத்திரை- -தேசப்பிதா- முடிவுரை.
ஒற்றுமையே உயர்வு, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, வெள்ளையனே வெளியேறு.
மு.முத்துமுருகன், தமிழாசிரியர்,
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,
ம.ரெட்டியபட்டி,
விருதுநகர் மாவட்டம்.