புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 16
விடைக்குறிப்பு
1.பொருளுக்கு ஏற்பத் தொடரைப் பிரித்துக் கோடிட்டுக் காட்டுக.
அ.பழைய / மாணவர் விடுதி.
பழையமாணவர் / விடுதி.
ஆ.கலா / அத்தை வீட்டுக்குச் சென்றாள்.
கலாஅத்தை / வீட்டுக்குச் சென்றாள்.
இ.அந்த / மான் எப்போது வரும்?
அந்தமான் / எப்போது வரும்?
ஈ.பல / கைகள் உடைந்தன.
பலகைகள் / உடைந்தன.
2.பத்தியைப் பொருள் உணர்வுக்கேற்பக் கோடிட்டுப் படித்துக் காட்டுக.
உலகமே எதிர்த்து நின்றாலும் / உண்மையைப் பேசுவார்கள் / உத்தமர்கள். உண்மை / வலிமை உள்ளது, வாழ்க்கைக்கு / உறுதுணையானது. உண்மையைப் பேசி / அழிந்தவரும் இல்லை, பொய்யைப் பேசி / உயர்ந்தவரும் இல்லை என்பதை / மானிட வரலாறு / பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் / விளக்கிச் சொல்கிறது. எனவே, நாம் அனைவரும் / எப்பொழுதும் /
எவ்விடத்திலும் / உண்மையையே பேசுவோம் என்ற / கொள்கையோடு வாழ்வோம்.