புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 12
விடைக்குறிப்பு
குடிநீர் வசதி வேண்டி நகராட்சி ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
நகராட்சி ஆணையருக்குக் கடிதம்
அனுப்புநர்
கா.பாரதி,
3, காமராசர் நகர்,
மதுரை.
பெறுநர்
நகராட்சி ஆணையர்,
நகராட்சி அலுவலகம்,
மதுரை.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் - குடிநீர் வசதி வேண்டுதல்
தொடர்பாக...
வணக்கம்.
நான் மதுரையில் உள்ள காமராசர்
நகரில் வசித்து வருகிறேன்.
கடந்த சில நாள்களாக எங்கள்
தெருவில் குடிநீர்க் குழாய்கள்
பழுதடைந்துள்ளன. அதனால் குடிநீருக்காக
நீண்ட தூரம் சாலையில் நடந்து
செல்ல வேண்டி உள்ளது. அங்கும் போதுமான
குடிநீர் கிடைப்பதில்லை. அனைவரும் மிகவும்
சிரமப்படுகிறோம். பள்ளி மாணவர்கள்
குடிநீருக்காக அலையும் அவலநிலை
உள்ளது. எனவே எங்கள் பகுதியில்
பழுதடைந்துள்ள குடிநீர்க் குழாய்களைச் சரி
செய்து தருமாறு பணிவுடன்
கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
கா.பாரதி.
இடம் – மதுரை,
நாள் – 11-10-2021.
உறைமேல் முகவரி –
பெறுநர் –
நகராட்சி ஆணையர்,
நகராட்சி அலுவலகம்,
மதுரை.