புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 19
விடைக்குறிப்பு
1.படத்தைப் பார்த்து உங்கள் கருத்துகளை எழுதுக.
பச்சைக் காய்கறிகள், கீரைகள், பால்,
முட்டை, இறைச்சி, தேன் முதலியவை
உடலுக்கு ஊட்டம் தரும். நம் முன்னோர்
மஞ்சள், பூண்டு, சீரகம், கடுகு, மிளகு, ஏலம்,
இலவங்கம் இவற்றைப் பொடி செய்து
சமையலில் பயன்படுத்தி உணவே மருந்து
என்று வாழ்ந்து வந்தனர்.
தூய காற்றும் நன்னீரும்
சுண்டப்பசித்த பின் உணவும்
நோயை ஓட்டிவிடுமப்பா
நூறு வயது தருமப்பா என்கிறார் கவிமணி.
நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் மிகுந்த உணவுப்
பொருள்களே நமக்கு ஏற்றது.
2.முழக்கத்தொடர்களை உருவாக்குக.
சாலை விபத்துகளைத் தவிர்க்க வேண்டிச்
சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
முழக்கத்தொடர்கள்
1.சாலையில் அலைபேசி, ஆபத்தாகும் நீ யோசி.
2.தலைக்கவசம் உயிர்க்கவசம்.
3.வளைவில் முந்தாதே, வாழ்வைத்
தொலைக்காதே.
4.மிதவேகம், மிகநன்று.
5.சாலைவிதிகளை மதி, மாறும் உன் விதி.