கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, September 09, 2021

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 15 விடைக்குறிப்பு 9th refresher book tamil answer activity 15

 புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

ஒன்பதாம் வகுப்பு 

தமிழ் 

செயல்பாடு 15 

விடைக்குறிப்பு

 தாகம் கொண்ட காகத்தை நேர்காணல் காணும் கிளி


கிளி - வணக்கம் காகம் அவர்களே.

காகம் - வணக்கம், வாருங்கள், அமருங்கள்.

கிளி - உங்களால் மறக்க இயலாத நிகழ்வு ஏதேனும் கூறுங்கள்.

காகம் - அப்படியா, அன்று ஒரு நாள் நான் மிகுந்த தாகத்துடன் இருந்தேன்.

கிளி - தண்ணீர் கிடைக்கவில்லையா.

காகம் - ஆம், பல இடங்களுக்கும் பறந்து சென்று பார்த்தேன், தண்ணீரே கிடைக்கவில்லை.

கிளி - பிறகு என்ன செய்தீர்கள்.

காகம் - ஓரிடத்தில் இரண்டு மண்குடங்களில் தண்ணீர் இருந்தது, ஒரு மண்குடத்தின் மீது அமர்ந்து தண்ணீர் குடிக்க முயன்றேன் முடியவில்லை.

கிளி - ஏன் முடியவில்லை.

காகம் - தண்ணீர், குடத்தின் கீழ்ப்பகுதியில் இருந்தது.

கிளி - எப்படிக் குடித்தீர்கள்.

காகம் - அருகே கிடந்த கற்களை ஒவ்வொன்றாக எடுத்துக் குடத்தினுள் போட்டேன்.

கிளி - சிறந்த யோசனை.

காகம் - தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வரத்தொடங்கியது.

கிளி - அருமை.

காகம் - பெரிய கல்லைப்போட்டால் விரைவாகத் தண்ணீர் மேலே வரும் என எண்ணி பெரிய கல்லைப் போட்டேன்.

கிளி - அப்புறம் என்னாச்சு.

காகம் - மண்குடம் உடைந்து தண்ணீர் வீணானது.

கிளி - அடடா, பிறகு என்ன செய்தீர்கள்.

காகம் - நான் மனம் தளரவில்லை, பக்கத்தில் இருந்த குடத்தில் சிறுசிறு கற்களாக எடுத்துப்போட்டேன்.

கிளி - தண்ணீர் மேலே வந்ததா.

காகம் - ஆம், தண்ணீர் மேலே வர, அதைப் பருகி என் தாகம் தீர்ந்தது.

கிளி - இந்நிகழ்வு மூலம் என்ன உணர்ந்தீர்கள்.

காகம் - விடா முயற்சி வெற்றி தரும் என உணர்ந்தேன்.

கிளி - நன்றி காகம் அவர்களே.

காகம் - நன்றி.

தமிழ்த்துகள்

Blog Archive