புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 13
விடைக்குறிப்பு
1.மரங்களால் மனிதன் பெறும் அடிப்படைத் தேவைகளைக் குறிப்பிடுக.
நீர், காற்று, உணவு, உடை, உறைவிடம்.
2.பத்தியில் இடம்பெற்றுள்ள உருவகத்தொடர் அல்லாததைக் கண்டறிக.
அ.முகிற்கலைஞன் ஆ.நதிப்பெண்
இ.உயிர்மரங்கள் ஈ.மரவுரி
இ.உயிர்மரங்கள்
3.மரம் நமக்கு வழங்குவன யாவை?
நீர், காற்று, உணவு, உடை, உறைவிடம், நிழல், மருந்து, விறகு, மழை, இலை, பூ, காய், பழம், வேர், மரவுரி, கிளை, பிசின், பொடி, தளிர்.
4.எல்லா உயிர்களுக்கும் உயிராக மரங்கள் விளங்குகின்றன. - எவ்வாறு?
நீர், காற்று, உணவு, உடை, உறைவிடம், நிழல், மருந்து, விறகு, மழை, இலை, பூ, காய், பழம், வேர், மரவுரி, கிளை, பிசின், பொடி, தளிர் போன்றவற்றை வரையின்றி வழங்கி மனித வாழ்வில் மகத்தான இடத்தைப் பிடிப்பதால் எல்லா உயிர்களுக்கும் உயிர் மரங்களே.
5. பத்தியைப்படித்துப் பொருளுணர்ந்து உரையாடலை நீட்டித்து எழுதுக.
மலர்விழி - சுற்றுச் சூழலுக்கு மரங்கள் பெரிதும் துணைபுரிகின்றன என்று கூறுகிறார்களே வெண்பா அதனைக் குறித்து நீ ஏதும் அறிவாயா?
வெண்பா - புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம், விளைநிலங்கள் அழிதல், நகரமாதல் போன்ற செயல்களே சுற்றுச்சூழல் அழிவிற்குக் காரணம் என அறிவேன். ஆகவே மரம் நட்டுப் பசுமை நிறைந்த நிலமாகச் சுற்றுப்புறத்தை மாற்றுவது நமது கடமை.
மலர்விழி - மரங்கள் தரும் பொருள்கள் எவை எனக் கூறு வெண்பா.
வெண்பா - நீர், காற்று, உணவு, உடை, உறைவிடம், நிழல், மருந்து, விறகு, மழை, இலை, பூ, காய், பழம், வேர், மரவுரி, கிளை, பிசின், பொடி, தளிர் இவை அனைத்தும் மரங்கள் தருபவைதான் மலர்விழி.