புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 17
விடைக்குறிப்பு
1.பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கவிதையை நிறைவு செய்க.
அன்பும் அரவணைப்பும்
ஆணிவேராய் இவளிடம்
பண்பும் பாசமும்
பசையாய் இவளிடம்
இன்பமும் ஈகையும்
இதமாய் இவளிடம்
தன்னலமும் சோர்வும்
தங்காது இவளிடம்
அன்னையெனும் வடிவில்
இறையே இவளிடம்.
2.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் ஒவ்வொன்றிலும் இரண்டு முதல் நான்கு வரிகளுக்குள் கவிதை எழுதுக.
உழைப்பு
உழைப்பு உயரம் தரும்
உழைப்பு உறுதி தரும்
உழைப்பு நம்பிக்கை தரும்
உழைப்பு வளம் தரும்.
பூமி
மரங்கள் பூமியின் காவலர்கள்
மரங்கள் வளர்த்து பூமி காப்போம்
பூமிக்கு வேறெங்கும் கிளைகளில்லை
பூமியே மனிதர்களின் கருவறை.
மழை
மேகம் பொழிந்து முடித்த பின்
மரங்கள் பொழிகிறது
மண்ணில் விழுகிறது
மரத்திலிருந்து மழைத்துளி.
மழலை
தட்டுத்தடுமாறி
தடங்கள் பதித்து
தன்னம்பிக்கையுடன்
தளிர்நடை போடுகிறது மழலை.
3.படத்தைப்பார்த்து கவிதை எழுதுக.
மரங்களை அழித்து
மண்ணை விற்று
மனம் சுவாசத்திற்கு ஏங்கி
மீண்டும் மரம் வளர்க்கும் மானுடம்
மரத்தின் அவசியம் அறிந்து
மனிதன் வளர்ப்பான் புரிந்து.