கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, September 08, 2021

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 11 விடைக்குறிப்பு 9th refresh book tamil answer activity 11

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
ஒன்பதாம் வகுப்பு 
தமிழ் 
செயல்பாடு 11 
விடைக்குறிப்பு 
1.அம்மா என்னும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக; பேசுவதை எழுத்தாக அளிக்க.
அம்மா..
மெல்லின ஒலிகளால் என்னை இயக்கும் உயிர் எழுத்து அம்மா! பத்து மாதம் என்னை வயிற்றில் சுமந்ததோடு வாழ்நாள் முழுதும் என் நலனில் அக்கறை கொண்டவர் தான் அம்மா! தன் உதிரத்தைப் பாலாக்கி என்னை வளர்த்து ஆளாக்கியவள் அம்மா! அன்பு, கருணை, இரக்கம், சுயநலமின்மை இவற்றின் மொத்த உருவம் அம்மா! தான் பட்டினி கிடந்தாலும் தன் பிள்ளை ஒருவேளையேனும் உண்ணாமல் இருக்க இடம் கொடுக்காத பேரன்பு அம்மா! ஈன்ற பொழுதினும் தன் பிள்ளையைச் சான்றோன் என ஊரார் புகழும்போது உளம் மகிழ்பவள் அம்மா! இருக்கும் போது இவள் அருமை புரியாத சிலருக்குக் கூட இறந்த பின்னும் கருணையே உருவாய் அன்பு கண்ட போதெல்லாம் வாழ்வில் நினைக்கத் தோன்றும் உன்னத உயிர்தான் அம்மா!

2.கொரோனா காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி இரண்டு நிமிடம் பேசுக; பேசுவதை எழுத்தாக அளிக்க.

கோவிட்-19 என்று பெயரிட்டு இருக்கிறோம் ஓர் உயிர்க்கொல்லி நோய்க்கு!
வில்லும் வாளும் ஏந்தி போர்க்களத்தில் எதிரில் வரும் எதிரிகளை வீழ்த்தி விட முடியும். எங்கிருந்தோ இருந்துகொண்டு வீசும் ஏவுகணைகளைக் கூட எதிர்த் தாக்குதல் நடத்தி அழித்துவிட முடியும். கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமிகளை நாம் என்னதான் செய்ய முடியும்?
முகக் கவசம் அணிவதும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் மட்டுமே பெருந்தொற்றில் இருந்து நாம் தப்பிக்க வழிகள். கைகளை அடிக்கடி கழுவிக் கொள்வது முக்கியமானது. தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிவதும் பிறரோடு உடல் தொடலை குறைத்துக் கொள்வதும் விழிப்புணர்வு. இருமல் முதல் தும்முதல் வரை அக்கம்பக்கம் பார்த்துச் செய்ய வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் யோகாசனங்கள் செய்வது மூலம் சுவாசப் பாதையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். காய்கறிகள் கீரைகள் இவற்றை வேகவைத்துச் சாப்பிட வேண்டும். மிளகு, இஞ்சி, பூண்டு, நிலவேம்பு இவற்றை அடிக்கடிப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்து குடிக்க வேண்டும். "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்"என்ற வள்ளுவரின் வாய்மொழியை மறந்து விடக்கூடாது. வந்தபின் காப்பது மடமை; வருமுன் காப்பது அறிவுடைமை. வெள்ளம் வருமுன் தானே அணை போட வேண்டும். ஒரு கை தட்டினால் ஓசை வராது; தனிமரம் தோப்பாகாது. அனைவரும் ஒன்றுகூடி செயல்பட்டால் மட்டுமே கொரோனா என்ற பேரிடரை எதிர்கொள்ள முடியும்.

3.கொரோனா கால கதாநாயகர்கள்
கொரோனா காலத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் போன்றோரே நமக்குக் கதாநாயகர்களாகத் தெரிகிறார்கள். இவர்களில் ஒருவரைப் பற்றி இரண்டு நிமிடம் பேசுக.



தமிழ்த்துகள்

Blog Archive