புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 15
விடைக்குறிப்பு
1.திருமந்திரப் பாடலைப் படித்துச் செய்யுள் நயம் பாராட்டுக.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
- திருமூலர்.
திரண்ட கருத்து
படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.
மையக்கருத்து
மக்களுக்குக் கொடுப்பது இறைவனுக்குக் கொடுப்பதாகும்.
சந்த நயம்
சந்தம் பாட்டுக்குச் சொந்தம் என்பதற்கேற்ப சந்த நயத்துடன் அமைந்துள்ளது இப்பாடல்.
தொடை நயங்கள்
தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும் - இப்பாடலில் அமைந்துள்ள தொடை நயங்களைக் காண்போம்.
மோனை நயம்
முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை
படமாட - பகவற்கு
எதுகை நயம்
இரண்டாமெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை
படமாட - நடமாட
இயைபு நயம்
இறுதி எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது இயைபு
ஈயில் - ஈயில்
அணிநயம்
இப்பாடலில் கோயில் என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவதால் சொல்பொருள் பின்வருநிலையணி அமைந்துள்ளது.
2.ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்
- கலிங்கத்துப்பரணி.
இவ்வடிகளில் பயின்றுவரும் நயம் எது?
ஒருவர் - ஒருவரின் - ஓட
மோனை நயம்
3.பழ மணல் மாற்றுமின்
புது மணல் பரப்புமின்
- மணிமேகலை.
இவ்வடிகளில் பயின்றுவரும் நயங்களை எடுத்துக்காட்டுடன் எடுத்து எழுதுக.
பழ - புது - மோனை நயம்
மாற்றுமின் - பரப்புமின் - இயைபு நயம்