கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, September 08, 2021

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 14 விடைக்குறிப்பு 9th refresher book tamil answer activity 14

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

ஒன்பதாம் வகுப்பு 

தமிழ் 

செயல்பாடு 14 

விடைக்குறிப்பு

1.பின்வரும் பாடலைப் படித்து பின்வரும் செய்யுள் நயம் பாராட்டி அட்டவணையை நிரப்புக.

கத்தி யின்றி ரத்தமின்றி

    யுத்த மொன்று வருகுது

சத்தி யத்தின் நித்தி யத்தை

    நம்பும் யாரும் சேருவீர்

கண்ட தில்லை கேட்ட தில்லை

    சண்டை யிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணி யந்தான்

    பலித்த தேநாம் பார்த்திட.

தலைப்பு

அகிம்சை

மையக்கருத்து

காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டத்தின் வீரியத்தை உணர்த்துகிறது.

மோனை

த்தி - ண்ட 

ண்டு - லித்த

எதுகை

த்தி - சத்தி

ண்ட - பண்டு

த்தி - யுத்

ண்ட - சண்டை

இயைபு

கத்தியின்றி - ரத்தமின்றி

கண்டதில்லை - கேட்டதில்லை

2.பின்வரும் பாடலைப் படித்து அவற்றில் இடம்பெறும் எதுகை, மோனை, இயைபுத் தொடைகளின் நயங்களை விளக்குக.

சிந்தித்தேன் சிந்தித்தேன் உலக மக்கள்

    சிந்தையிலே ஒளியில்லை பலரை இங்கே

சந்திக்கும் போதெல்லாம் இருட்டுக் குள்ளே

    தலைகுனிந்து நிற்பதிலே மகிழ்ச்சி என்பார்

முந்துகின்ற உணர்வுகளும் குன்றி நம்பி

    முன்நடக்க வழிகாட்டி எவரும் இன்றி

சந்தியிலே நிற்கின்றார் ஊக்கம் ஊட்டி

    சரியாக வழிநடத்தல் கடமை என்பேன்

எதுகை

செய்யுளில் சீர்கள் அல்லது அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றுபோல வருவது எதுகை.

சிந்தித்தேன் - சந்திக்கும்

முந்துகின்ற - சந்தியிலே

சிந்தித்தேன் - சிந்தையிலே

மோனை

செய்யுளில் சீர்கள் அல்லது அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல வருவது மோனை.

சிந்தித்தேன் - சிந்தையிலே

முந்துகின்ற - முன்நடக்க

ந்தியிலே - ரியாக

இயைபு

செய்யுளில் சீர்கள் அல்லது அடிகளில் இறுதி எழுத்தோ சொல்லோ ஒன்றுபோல வருவது இயைபு.

குன்றி - இன்றி

வழிகாட்டி - ஊட்டி


தமிழ்த்துகள்

Blog Archive