ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 13
விடைக்குறிப்பு
1. அணி என்ற சொல்லின் பொருள் என்ன?
அணி என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள்.
ஒரு செயலைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபெறச் செய்தலை அணி என்பர்.
2. அணி இலக்கணம் பற்றிக் கூறும் தொன்மையான நூல் எது?
தண்டியலங்காரம்.
3. உவம உருபுகளைத் தொடரில் அமைத்து எழுதுக.
ஒப்ப, அன்ன, புரைய, போல
தாயொப்ப மகளும் நடந்தாள்.
அரிமா அன்ன அணங்குடைத் துப்பு.
தாமரை புரையும் காமர் சேவடி.
புலி போலப் பாய்ந்தான்.
4 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று - இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
இல்பொருள் உவமை அணி
5. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
உவமை அணி
பொருள் -
பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்துவிடும்.
உவமை -
நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர்
உவமேயம் -
பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கை
உவமஉருபு -
போல
உவமை ஒரு தொடராகவும், உவமேயம் மற்றொரு தொடராகவும் வந்து உவமஉருபு வெளிப்படையாக வந்ததால் இது உவமை அணி.