kalaignar karunanidhi kavithai
கலைஞர் நூற்றாண்டு
விழா கவிதை 2
போர்ப்பறை ஒலிக்கும் புலிகள்
கூட்டத்தே
ஆர்ப்பரிக்கும் சூரியனே!
பார்ப்பனியக் கூட்டத்தின்
சனாதனத்தை
வேரோடு பெயர்த்த வித்தகனே!
சூர்ப்பனகையை அரக்கி என்ற
சுய லாபக் கூட்டத்தின்
முகத்திரை கிழித்த இராவணனே!
வேர்ப்புழுவாய்த் தமிழ்நாட்டின்
வளர்ச்சிதனை
விழுங்குகின்ற மூடநம்பிக்கை
எரித்தவனே!
ஈரோட்டுப் பெரியாரின்
தேரோட்டியானவனே!
பார் போற்றும் அண்ணாவின்
படைத்தளபதி நீதானே?
யார் மட்டும் நீ காட்டும்
பேரன்பால் ஒரு கூட்டம்உன்
பேர் போற்றும் தம்பி யராய்க்
கூடுதய்யா
கடலில் தூக்கி எறிந்தாலும்
நீ கட்டுமரம்
காவிரி மருத்துவமனையில்
போட்ட போதும் நீ காட்டுமரம்
உடலில் ஓடுங் குருதியெல்லாம்
தமிழ் வாசம்
உலகத்திலேயே உன் பேனா
மட்டும் தான் தமிழ் பேசும்!
மூவேந்தர் போற்றி வளர்த்த
முத்தமிழை
மூவுலகம் போற்றச் செம்மொழி
ஆக்கியவனே!
தார்வேந்தர் தன்னடிமை
வழக்கமெல்லாம்
கண்மூடிப் போகும் வண்ணம்
செய்தவனே!
பாவேந்தர் புனைந்திட்ட
கவிதைக் கருவை
நாவேந்தி மேடையில் நர்த்தனம்
ஆடியவனே!
பூவேந்தும் உன் புன்சிரிப்பால்
தமிழ்நாட்டை
ஐம் முறை ஆண்டவனே!
ஓயா உழைப்பால் உறங்குகிறாயோ-உன்
அண்ணனின் மொழி கேட்டுக்
கிறங்குகிறாயோ?
தாயாய்த் தமிழை வளர்த்த
தமிழினத் தலைவா
உன்னை ஓயாப் புகழ் கொண்டு
எந்நாளும் பாடிடும் எந்நா
கவிஞர் கல்லூரணி முத்து
முருகன்
9443323199