கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 20, 2023

சுவாமி விவேகானந்தர் பேசுகிறேன் தமிழ்ப் பேச்சு, கட்டுரை

 

 

சுவாமி விவேகானந்தர் பேசுகிறேன்...

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலைவாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் - இந்தியத் தாயின் மைந்தர்களே! கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழ்க் குடியில் பிறந்த என் அன்பு சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்!

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று சொல்லி இருக்கிறார் வள்ளுவர். நீங்கள் காண்பது கனவு அல்ல நனவு தான்... ஆம் நான் தான் சுவாமி விவேகானந்தர்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

வங்காளத்து மண்ணில் விசுவநாத தத்தாவுக்கும் புவனேஸ்வரி தாயாருக்கும் மகனாகப் பிறந்த பெருமைக்குச் சொந்தக்காரனான நரேந்திரநாத் தத்தா நான் தான். ஜனவரி 12-ஆம் நாள் 1863ல் இந்திய மண்ணில் நான் பிறந்ததைப் புண்ணியமாகக் கருதுகிறேன். ஏன் தெரியுமா வர்த்தமான மகாவீரர் பிறந்ததும் வாழ்நாளெல்லாம் உண்மையைப் போதித்த புத்தர் பிறந்ததும் இந்த மண்ணில் தானே. நீங்கள் உலகுக்கு நாகரீகத்தைக் கற்றுத் தந்த இனத்துக்குச் சொந்தக்காரர்கள்!

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழ்க் கவிஞன் கணியன் பூங்குன்றன் 2000 ஆண்டுகளுக்கு முன்பே உலக ஒற்றுமையைப் பறைசாற்றியவன். இப்படிப்பட்ட உங்கள் முன் நான் பேசுவதை பெருமையாக நினைக்கிறேன்.

இளமையில் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் தான் நான் கல்வி கற்றேன். இளைஞனாக இருந்த போது எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. தமிழ் சித்தர்கள் சொல்வார்களே

நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே

சுற்றி வந்து முணுமுணு என்று சொல்லும் மந்திரம் ஏனடா?

நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவையை அறியுமோ? என்று. அப்படித்தான் நானும்.

மனித சக்திக்கு மிஞ்சியது இந்த உலகத்தில் ஏதுமில்லை. சாமி என்ற பெயரில் நம்மை மூட நம்பிக்கை கொண்டவர்களாக மாற்றிவிட்டார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அத்வைதக் கோட்பாடுகளில் எனக்கு நம்பிக்கை முதன் முதலில் பிறந்தது. எனவே பிரம்ம சமாஜத்தின் உறுப்பினராக நான் சேர்ந்தேன்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

1881 இல் இராமகிருஷ்ண பரமஹம்சரை நான் சந்தித்த பிறகு தான் உருவ அருவ வழிபாடுகளில் என் மனதைப் பறிகொடுத்தேன். உங்களுக்கெல்லாம் தெரியும் இறைவனை வழிபடுவதற்கு நான்கு விதமான வழிகள் இருக்கின்றன. ஞானமார்க்கம், யோக மார்க்கம், பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் என்று.

இந்தியாவைப் போன்ற ஆன்மீகத்தில் முன்னேறிய சமூகம் உலகில் வேறு எங்கும் இல்லை. அதனால் தான் 1886இல் இராமகிருஷ்ணர் இறந்த பிறகு 1892 இல் நான் கன்னியாகுமரி வந்தேன். அங்கு நீங்கள் இன்று காணக்கூடிய எனக்கான நினைவுமண்டபம் கட்டப்பட்டு இருக்கின்ற பாறை மீது அமர்ந்து டிசம்பர் 24 ஆம் நாள் முதல் மூன்று நாட்கள் தியானம் செய்தேன்.

மனிதனின் முற்பிறப்பு தற்போதைய வாழ்வு மற்றும் எதிர்காலம் பற்றி என்னுடைய சிந்தனை யோக மார்க்கமாகச் சென்றது. தெளிவான மனதுடன் சென்னை திரும்பிய என்னை அமெரிக்காவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றச் சொற்பொழிவாற்ற 1893இல் சென்னை இளைஞர்கள் வலியுறுத்தினர்.

சிகாகோ சென்று நான் பேசிய பேச்சு வரவேற்பைப் பெற்றது. லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன் என்று அனைவரும் அதாவது சீமான்களே சீமாட்டிகளே என்று விளித்துப் பேசியது சாதாரணமாக இருந்தது. ஆனால் நான் சகோதரர்களே சகோதரிகளே! என்று பேசிய பேச்சு கேட்டு கூடியிருந்த கூட்டம் கைதட்டியது. அந்த கை ஒலி அடங்க மூன்று நிமிடம் ஆனது. ஆம்!

ஆற்றுவளம் சோற்று வளம் கொஞ்சமா? இல்லை

ஆன்மீகத் தத்துவம் தான் பஞ்சமா ?

இனங்கள் பல மொழிகள் பல ஆயினும் - இந்து

இயேசு புத்த முகமதியர் ஆயினும்

ஒன்று நாடு உடன் பிறந்தோர் யாவரும் எனும்

உணர்விலேயே நடந்து வரும் நாடல்லவா? நம் பாரத நாடு.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

சிகாகோ மாநாட்டில் கிடைத்த வரவேற்புக்குப் பின்னர் நியூயார்க், லண்டன் போன்ற இடங்களில் வேதாந்த மையங்களை நான் நிறுவினேன். 26 ஜனவரி 1897 இல் கொழும்பு வந்து சேர்ந்தேன். பாம்பனில் இராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி சிறந்த வரவேற்பு கொடுத்தார்.

அடிமை வாழ்வு வாழ்ந்து வந்த காலம் அது. எஃகினும் நரம்பு முறுக்கேறிய 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள் இந்தியாவின் தலையெழுத்தையே நான் மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறினேன். இளைஞர்களின் எழுச்சி எதிர்காலத்தை மாற்றும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

எந்தக் காரணத்தைக் கொண்டும் நாம் பொறாமையைக் கைக்கொள்ளக்கூடாது. உண்மைக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம்; ஆனால், எதற்காகவும் உண்மையை விட்டுக் கொடுக்கக் கூடாது. பாசாங்கு செய்வதை விட நாத்திகனாக இருப்பதே மேல்! குறை சொல்லி இந்த உலகை நீங்கள் மட்டப்படுத்த வேண்டாம். அந்தக் குறைகளை சரி செய்வதற்கு உங்கள் உழைப்பைத் தாருங்கள். சேவைக்கு மிஞ்சிய தெய்வ பக்தி இல்லை என்பதெல்லாம் என் அறவுரைகள்.

அதனால் தான் என் கடன் பணி செய்து கிடப்பதே என்றார் திருநாவுக்கரசர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் யானொன்றும் அறியேன் பராபரமே என்றார் தாயுமானவர்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

இந்தத் தமிழ் மண், உலகின் முதல் இனம் தோன்றிய மண். யூப்ரடீஸ், டைகரிஸ் நதிக்கரையில் சுமேரிய நாகரிகத்தைத் தோற்றுவித்த பெருமைக்குரியவர்கள் உங்கள் முன்னோர்கள். அசிரிய - பாபிலோனியா நாகரிகமும் இவர்களுக்குப் பின்னர் தான் தோன்றியிருக்க வேண்டும்.

தமிழரின் வானியல் அறிவே விவிலியத்தின் மூலமாக இருந்திருக்கக்கூடும். மலபார் கடற்கரையில் வாழ்ந்த தமிழ் இனத்தால் ஏற்படுத்தப்பட்டதே எகிப்திய நாகரீகம் என்று உலகுக்கு உரக்கச் சொல்லுவேன்!

உங்கள் மனது உயர்ந்த இலட்சியங்களால் நிறைக்கப்பட வேண்டும். அவ்வாறு நிறைக்கப்பட்டால் இன்றைக்கு இருப்பது போல் நீங்கள் நூறு மடங்கு சிறந்தவர்கள் ஆகிவிடுவீர்கள்! நீங்கள் என்னவாக நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்! இன்று நாம் இருக்கும் இந்த நிலைக்கு நாமே பொறுப்பு என்று ஒவ்வொரு நாளும் கூறிக் கொள்ளுங்கள்.

சாவு, நன்மை, தீமை, அறிவு, அறியாமை இவைதான் இவ்வுலகத்தில் இருக்கும் மாயா. இதை விட்டு வெளியே வாருங்கள்! நீண்ட சிந்தனைக்குப் பின் உங்களுக்குள்ளே இருக்கும் புனிதத்தை வெளியே கொண்டு வாருங்கள்! மனிதர்கள் இயல்பில் தெய்வீகமானவர்கள். இந்தத் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே ஆன்மீகம் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.

உலகெங்கும் இன்றைக்கு என் சீடர்கள் இராமகிருஷ்ண பரமஹம்சாவால் ஏற்படுத்தப்பட்ட மடங்களையும் என்னால் ஏற்படுத்தப்பட்ட வேதாந்த மையங்களையும் சேவை ஆற்றுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

ஒரு காலத்தில் ரிஷிகளுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த ஆன்மீகம், ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினருக்கு மட்டுமே சொந்தமாக இருந்த ஆன்மீகம் அனைவருக்கும் சொந்தம் என்ற நிலை உருவாக வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற முழக்கம் எப்போதும் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கும். 1902 ஜூலை நான்காம் நாள் என்னுடைய 39 ஆம் வயதில் பேலூர் மடத்தில் நான் ஜீவசமாதி அடைந்தேன். என்னுடைய ஸ்தூல உடல் அழிந்தாலும் அருவ ( சூட்சும) உடல் உங்களைச் சுற்றித்தான் வருகிறது. ஆம்! நான் உங்களுடனே இருக்கிறேன்.

எஃகினும் நரம்பு முறுக்கேறிய இளைஞர்களே! வல்லரசு இந்தியாவின் தூண்களே! நம்பிக்கை கொள்ளுங்கள்! அதைவிட உங்களை உயரத்தில் கொண்டு போகும் உந்து சக்தி இவ்வுலகில் ஏதுமில்லை!

ஊதி அணைத்து விட நீங்கள் ஒன்றும் அகல் விளக்குகள் அல்ல; சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்குகள்! புயலுக்குத் தலைவணங்க நீங்கள் ஒன்றும் புல்லல்ல; எதற்கும் அஞ்சாத இமயமலை!

வாய்ப்புக்கு நன்றி! வருகிறேன்! விடைபெறுகிறேன்!

-        கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199              தமிழ்த்துகள்

 

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive