7th Tamil Model Notes Of Lesson
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
27-08-2024 முதல் 31-08-2024
2.பருவம்
1
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
நாடு அதை நாடு –
கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
வழக்கு
6.பக்கஎண்
67- 70
7.கற்றல் விளைவுகள்
T-720 பல்வேறு பாடப்பொருள்களைப் பல்வேறு
நோக்கங்களுக்காக எழுதும்பொழுது, பொருத்தமான சொற்கள், தொடரமைவுகள், சொற்றொடர், மரபுத்தொடர்,
நிறுத்தக்குறிகள் மற்றும் பிற இலக்கணக்கூறுகளைப் (காலம், பெயரடை, இணைச்சொற்கள்) பொருத்தமாகப் பயன்படுத்துதல்.
8.கற்றல் நோக்கங்கள்
சொற்கள்
மற்றும் தொடர்களில் பயின்றுவரும்
வினைமுற்றுகளை அறிந்து பயன்படுத்தும் திறன்.
9.நுண்திறன்கள்
வழக்குச் சொற்கள்,
போலி போன்றவற்றைப் பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளும் திறன்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/06/7-1-3-vazhakku-poli-7th-tamil-ilakanam.html
https://tamilthugal.blogspot.com/2021/07/1-3-valakku-7th-tamil-ilakkanam-vazhaku.html
https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_74.html
https://tamilthugal.blogspot.com/2021/05/boli-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/04/poli-tamil-ilakkanam.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த ஊர்களின் சுருக்கப் பெயர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
வழக்குச் சொற்களைக்
கூறிப் பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
தகுதி வழக்கு, இயல்பு
வழக்கு இவற்றின் வகைகளைக் கூறி உதாரணங்களுடன் விளக்குதல். போலியையும் அதன்
வகைகளையும் எடுத்துக்காட்டுகள் மூலம் புரிய வைத்தல்.
மாணவர்கள் அறிந்த
குழூஉக்குறிச் சொற்களைக் கூறச்செய்தல். ஐந்து – அஞ்சு முற்றுப்போலியாக நாம்
பயன்படுத்தும் பிற சொற்களை அறிந்து வரச் செய்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், கதைப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் இடக்கரடக்கல், மங்கலம், மரூஉச் சொற்களைப்
பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – வழக்கு
.............................. வகைப்படும்.
ந.சி.வி – தகுதி வழக்கின் வகைகளை
எழுதுக.
உ.சி.வி – நன்காடு என்பது
எவ்வாறு மங்கல வழக்குச் சொல்லுக்கு உதாரணமாகும் என விளக்குக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
குழூஉக்குறிச் சொற்கள் எங்கெங்கெல்லாம் பயன்படும் என்று சிந்தித்து எழுதுக.