INDEPENDENCE DAY SPECIAL
விடுதலைப் போரில் தமிழகம்
முச்சங்கப் புலவர் முதல் முந்தாநாள் புலவர் வரை
நாவில் விளையாடும் நற்றமிழே வணக்கம்! அன்னை மடியில் தவழ்ந்த போதே என் நாவை அசைத்த செம்மொழியே
வணக்கம்! ஆன்றவிந்தடங்கிய அவைத் தலைவர் அவர்களுக்கு வணக்கம்! விடுதலைக் காற்றை சுவாசித்துக்
கொண்டிருக்கும் என் அருமை உடன்பிறப்புகளே வணக்கம்! தமிழ்த்துகள்
‘பாரத
நாடு பழம் பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்’ என்றார் மகாகவி பாரதியார். உலகிற்கு நாகரிகத்தைக்
கற்றுக் கொடுத்த இனம் தமிழ் இனம். அதனால்தான்
‘என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள்
தாய்’ என்று பாராட்டப் பெறுகிறாள்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பது உலகறிந்த உண்மை. தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலக ஒற்றுமை பேசியவர் கணியன் பூங்குன்றனார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று உலகப் பொதுமறையாம் திருக்குறள் கூறுகிறது.
வணிகம் செய்ய வந்த வெள்ளையர்கள் நம் மண்ணின் வளத்தைச் சுரண்டத் தொடங்கினர். வரி கொடுக்க
மாட்டோம் என்ற வரிசையில் முதல் குரல் தமிழ்நாட்டில் இருந்து தான் ஒலித்தது.
நெற்கட்டும் செவல் பகுதியைச் சேர்ந்த பூலித்தேவன் அப்பெருமைக்குச் சொந்தக்காரர் ஆவார். வயலுக்கு
வந்தாயா? நாற்று
நட்டாயா? களை பறித்தாயா? நீர் பாய்ச்சி
நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கு கொஞ்சி விளையாடும் என் குலப்பெண்களுக்கு
மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? நீ என்ன மாமனா மச்சானா மானங்கெட்டவனே! என்று கும்பினியை
நோக்கிக் குரல் கொடுத்தவன் வீரபாண்டிய கட்டபொம்மன். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
கட்டாலங்குளத்தைச் சார்ந்த வீரன் அழகுமுத்துக்கோன் தன் கால்களில் துப்பாக்கிச் சூடு பட்ட போதும்
வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்து மாண்டார். வெள்ளையருக்கு எதிராக முதல் பெண்
குரல் சிவகங்கைச் சீமை வேலு நாச்சியாரின் குரல் ஆகும். மருது சகோதரர்களுடன் சேர்ந்து திப்பு சுல்தான் கொடுத்த படையுடன் வெள்ளையனை
ஓட ஓட விரட்டியடித்த பெருமைக்குச் சொந்தக்காரர் அவர். கொங்கு நாட்டின் தீரன் சின்னமலையும் எட்டயபுரத்து வீரன் சுந்தரலிங்கமும் வெள்ளையனை எதிர்த்த இணையில்லா வீரர்கள்.
வேலூரில் நடந்ததே முதல் இந்திய சுதந்திரப் போர்.
அதை மறைத்து விட்டது வேலூர்ப் புரட்சி என்ற பெயரில் வெள்ளையரசு. செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கப்பல்
ஓட்டினார். அதற்கு பெரும் நிதி வழங்கியவர் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த
வள்ளல் பாண்டித்துரைத்
தேவர். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சுப்பிரமணிய சிவா பாரதியாருடன் இணைந்து நெல்லை மாவட்டத்தில் மக்களின்
நாடி நரம்பு எல்லாம் விடுதலை உணர்வு பொங்கும் விதமாக பொதுக்கூட்டங்களில் பேசினார்.
இந்திய தேசிய ராணுவத்தை வெள்ளை அரசுக்கு எதிராக நேதாஜி திரட்டிய போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆயிரக்கணக்கான தமிழர்களை அப்படையில் இணைத்து விடுதலைப்
போரில் பங்கு பெறச் செய்தார். தமிழ்த்துகள்
அக்கா அக்கா என்றே நீ அழைத்தால் சுக்கா மிளகா
கொடுக்கச் சுதந்திரம் கிளியே என்று பாடினார் பாவேந்தன் பாரதிதாசன். கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது
என்று வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்புக் காய்ச்ச சென்றவர்களுக்கு வழிநடைப் பாடல்
எழுதினார் நாமக்கல்
கவிஞர்.
ஈகையும் வீரமும் இரு கண்கள் எனக் கொண்டவர்கள்
தமிழர்கள். தன்மானத்திற்கு இழிவு வந்துவிட்டால் எவர் தடுத்தாலும் நிற்க மாட்டார்கள்.
ஆஷ்துரையைச் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனும் அப்படித்தான். தமிழ்த்துகள்
தீரர் சத்தியமூர்த்தி,
வ.வே.சு. ஐயர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர் ஆகியோரும் மக்களின் விடுதலைக் கனலை மூட்டிய பெருமைக்குச்
சொந்தக்காரர்கள்.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
தலைக்கு ஒரு கிரீடம் உனக்கு எதற்கு? தலையே
கிரீடம் தான் உனக்கு! தன்னிகரில்லாத் தமிழகம் இந்திய விடுதலை வேள்வியில் எண்ணற்ற உயிர்களைப்
பலி கொடுத்திருக்கிறது.
தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிர்தம் அவனுடை மொழியாகும் தமிழ்த்துகள்
அன்பே அவனுடை வழியாகும்!
பாரத நாட்டின் மைந்தர்களாகப் பீடு நடை போடுவோம்!
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்!
வாய்ப்புக்கு நன்றி வருகிறேன், விடைபெறுகிறேன்!
- கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199 தமிழ்த்துகள்
மு.முத்துமுருகன்,
தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,
ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்