கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, August 21, 2023

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மொழி முதல், இறுதி எழுத்துகள்

 6th Tamil Model Notes Of Lesson

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

27-08-2024 முதல் 31-08-2024

2.பருவம்

1

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

எந்திர உலகம் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

மொழி முதல், இறுதி எழுத்துகள்

6.பக்கஎண்

69-71

7.கற்றல் விளைவுகள்

T-611 ஒலியியைபு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத்தொடர்கள் போன்ற மொழியின் மரபு நடை நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள், கட்டுரைகளின் நயம் பாராட்டல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழில் பிழையின்றி எழுதும் திறன்

9.நுண்திறன்கள்

மொழி முதல் இறுதி எழுத்துகளை அறிந்து கொள்ளும் ஆர்வம் பெறும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/05/3.html

https://tamilthugal.blogspot.com/2021/07/1-3-6th-tamil-q.html

https://tamilthugal.blogspot.com/2020/06/11.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த தமிழ்ச் சொற்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

மொழி முதல் இறுதி எழுத்துகளைக் கூறிப் பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள், வராத எழுத்துகள், மொழி இறுதி எழுத்துகள், இறுதியாகா எழுத்துகள், சொல்லின் இடையில் வரும் எழுத்துகள் பற்றிக் கூறி அவற்றுக்கு உதாரணங்கள் தந்து விளக்குதல்

 


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், அறிவியல் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

சொற்களஞ்சியத்தை மாணவர்களிடம் உருவாக்குதல். தமிழ்ச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து ..............................

          ந.சி.வி – மொழிக்கு இறுதியில் வாரா மெய்யெழுத்துகள் யாவை?

          உ.சி.வி – ஞ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

க வரிசை எழுத்துகளுக்கு எடுத்துக்காட்டுகள் எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive