கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, August 14, 2023

திறன்மிகு விதை நீ ஏனிந்த உறக்கம்? தமிழ்ப் பேச்சு கட்டுரை

  திறன்மிகு விதை நீ ஏனிந்த உறக்கம்?

முத்துத் தமிழ் பதித்து மூன்று நெறி வளர்த்து கத்துங்கடல் மீது கலங்களில் விளையாடும் தென்பாண்டி மண்டலமே! நக்கீரன் நன்னாகன் நப்பசலை ஒக்கூர் மாசாத்தி ஒண் சாத்தான் சிலம்பெடுத்த தக்கோன்; யாப்பிலாப் பாடலேனும் யார் தரும் கவிதையேனும் மா பலா போல் மடியில் வாங்கி மூப்பிலாத் தமிழை மூச்சாகக் கொண்டு வாழும் உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்!                   தமிழ்த்துகள்

 தாய்ப்பாலோடு தமிழ்ப் பாலைக் குடித்து மேய்ப்பார் எவருமின்றித் திரியும் காளையின் கொம்புகளாய் வலிமையோடு நிற்கும் இளைஞர் கூட்டத்தை வணங்கி மகிழ்கிறேன்!

      வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் தமிழ்த்துகள்

      உள்ளத் தனையது உயர்வு என்பார் பொய்யாமொழிப் புலவர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் கடைக்கோடியில் இருந்து ஒலித்தது யாதும் ஊரே யாவரும் கேளிர்! ஆம் கணியன் பூங்குன்றனின் வைர வரிகள் அவை. தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

“நாமார்க்கும் குடியல்லாம் நமனை அஞ்சோம்” என்று பாடினார் நாவுக்கரசர். வீரத்தையும் மானத்தையும் வித்தாகக் கொண்டு பிறந்தவர்கள் நாம். நம் மண்ணில் பிறந்தவுடன் இறந்த குழந்தை ஆண் குழந்தையாக இருந்து விட்டால்               தமிழ்த்துகள்

“குழவியிறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

ஆளன்று என்று வாளின் தப்பார்” என்கிறார் சேரமான் கணைக்கால் இரும்பொறை. சிறைக் காவலன் தாமதமாகக் கொண்டு வந்த தண்ணீரைக் குடிக்காது உயிர் விட்ட தன்மானச் சிங்கம் அல்லவா? அவன்!            தமிழ்த்துகள்

   என்னால் என்ன முடியும்? என்று சோம்பிக் கிடப்பது மனித இனத்திற்கே அவமானம். கூட்டுப் புழு தான் பட்டுப்பூச்சியாய்க் கோலம் கொள்ளும் மறவாதே! என்ற வைரமுத்துவின் வரிகளை நீங்கள் படித்ததில்லையா?

   மூன்று குழந்தைகளுக்குத் தாயான இந்திய வீராங்கனை மேரி கோம் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கியது நினைவிலில்லையா? மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தங்கவேலு மாரியப்பனின் வெற்றி சாத்தியமானதை மறந்து விட்டீர்களா? தமிழ்த்துகள்

      “தூங்கும் போது வருவதல்ல கனவு உன்னைத் தூங்க விடாமல் செய்வது தான் கனவு” என்று ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டுச் சென்று இந்தியாவின் உயர்ந்த இடமான குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்த அந்த அக்னிப் பறவை அப்துல் கலாம் ஒருவர் போதாதா? உங்கள் தளர்ந்த உள்ளங்களைத் தட்டி எழுப்ப!

    தொல்காப்பியன் அன்றே காட்டினான் ஓருயிர்ப் பிறப்பிலிருந்து ஆறாம் அறிவாகிய மனிதன் வரை! புலிகள் எப்போதும் ஓநாய்களோடு போட்டி போடுவதில்லை! அதற்கான காலம் வரும் வரை காத்திருக்குமாம். தனக்கான காலம் வரும் வரை கண்மூடி மண்ணுக்குள் கிடைக்கும் விதை உங்களுக்கு நினைவிலில்லையா? ஏன் இந்த உறக்கம்?   தமிழ்த்துகள்

இந்த உலகம் இவ்வளவு வேகமாக நகர்கிறது என்றா? வறுமை உங்களைப் பிடித்து ஆட்டுகிறது என்றா? முறையான கல்வி பயில உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றா?

 வானம் அழுவது மழை எனும் போது

வையம் அழுவது பனி எனும் போது

கானம் அழுவது கலையெனும் போது

கவிஞன் அழுவது கவிதை ஆகாதோ? என்றார் கவியரசர் கண்ணதாசன். தமிழ்த்துகள்

“மூலையில் கிடக்கும் வாலிபனே தினம்

முதுகில் வேலையைத் தேடுகிறாய்!

பாலைவனம் தான் வாழ்க்கையென வெறும்

பல்லவி எதற்குப் பாடுகிறாய்?” தமிழ்த்துகள்

மண்ணில் உயிர்களைப் படைத்த போதெல்லாம் இறைவன் பெருமை அடைகிறான். ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஓராயிரம் திறமைகளைப் புதைக்கின்றான். புரிந்தது எழுந்து நிற்கிறது; புரியாதது மண்ணில் கிடக்கிறது. தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

விழுவதல்ல வாழ்க்கை; எழுவதுதான் வாழ்க்கை

விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள்

வேங்கைப் புலி நீ தூங்குவதா?

இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று தமிழ்த்துகள்

எங்கே கிழக்கெனத் தேடுவதா?

எஃகினும் நரம்பு முறுக்கேறிய நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர். உன் தோள்கள் துடிக்கவில்லையா! துயரமே உன் வாழ்க்கை என்று நினைத்து விட்டாயா?

தோள்கள் உனது தொழிற்சாலை நீ

தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை

தோல்விகள் எதுவும் உனக்கில்லை இனி தமிழ்த்துகள்

தொடுவானம் தான் உன் எல்லை

உலகுக்கு நாகரிகத்தைக் கற்றுத் தந்த இனம் அல்லவா? உலக ஒற்றுமையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திட்ட இனம் அல்லவா? சிங்கநிகர் குருளைகளாக வலம் வரவேண்டிய உனக்குள்ளே ஏன் தயக்கம் என்ற தங்கு தடை? தமிழ்த்துகள்

மண்புழு அல்ல மானிடனே நீ

மாவலி காட்டு வானிடமே! தமிழ்த்துகள்

அண்ணல் அம்பேத்கரும் அன்று வகுப்பறையில் அவமானப்பட்டவர்தான்! அண்ணல் காந்தியும் ஆங்கிலேயரால் சிறைப்பட்டவர்தான்! இந்தியாவின் தலையெழுத்தாம் அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்க அவர் பட்ட பாடுகள் தான் எத்தனை? தேசத் தந்தை என்ற புகழ் மட்டுமல்ல உலகம் வணங்கும் உத்தமராகக் காந்தி வலம் வருவதற்குப் பட்ட அவமானங்கள் எத்தனை?             தமிழ்த்துகள்

பூட்டிய இரும்புக் கூட்டின் கதவுகள் திறக்கப்பட்டது சிறுத்தைப் புலியே வெளியே வா!

விசால வானத்தின் வீதிகளிலே விடுதலைப் பறவையாய் சிறகடி!

உனக்குள் இருக்கும் படைப்பாற்றலை உலகம் உணரச் செய்திடு! கூகுள் பிச்சையும்

ஆனந்த் மகேஸ்வரியும் உலகம் போற்றும் திறமையாளர்கள்! பி.டி.உஷாவும் அஸ்வினி நாச்சப்பாவும் ஓடிய ஓட்டம் கொஞ்சமா? உசேன் போல்ட்க்கு மட்டும் இரண்டு இதயமா? சிந்தனை செய்!  உன் திறமைக்கு வந்தனை செய்ய உலகம் காத்துக் கிடக்கிறது.   தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நம் இந்திய மண்ணில் 14 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் 27 கோடிப் பேர் என்கின்றன புள்ளி விவரங்கள். உலகில் எந்த நாட்டிலும் இவ்வளவு வலிமை இல்லை.

வேற்றுமையில் ஒற்றுமை தான் பாரதம் தம்பி            தமிழ்த்துகள்

வேதங்கள் பிறந்த இடம் பாரதம்

ஆற்று வளம் சோற்று வளம் கொஞ்சமா?

இல்லை ஆன்மீகத் தத்துவம் தான் பஞ்சமா?

இனங்கள் பல மொழிகள் பல ஆயினும்

இந்து இயேசு புத்த முகமதியர் ஆயினும்                            தமிழ்த்துகள்

ஒன்று நாடு உடன் பிறந்தோர் யாவரும் எனும்

உணர்விலேயே வளர்ந்து வரும் நாடு இது!

உழைப்பைக் கொட்டி உயர்ந்து நிற்கும் மனிதர்கள் நம் முன்மாதிரிகள்! வியர்வை சிந்தி விளைச்சல் கண்ட விவசாயத் தோழர்கள் நம் ஊக்கிகள்! வறுமையை உடைக்கும் வழிதான் கல்வி! அறியாமை இருளை அகற்றும் தீப்பந்தம் தான் கல்வி!

சோம்பிக்கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறை பிடிக்கும்; எழுந்து நடந்தால் இமயமும் உனக்குக் குடை பிடிக்கும்! வா இளைஞனே.           தமிழ்த்துகள்

ஊதி அணைத்து விட நீ ஒன்றும் அகல் விளக்கல்ல; சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்கு!

புயலுக்குத் தலை வணங்க நீ ஒன்றும் புல் அல்ல; எதற்கும் அஞ்சாத இமயமலை!

இந்தியாவின் முதுகெலும்பே எழுந்து வா! வல்லரசு என்ற மணிமகுடம் உனக்காய்த் தவம் கிடக்கிறது!                                         தமிழ்த்துகள்

  வாய்ப்புக்கு நன்றி! வருகிறேன் விடைபெறுகிறேன்!

-        கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199              தமிழ்த்துகள்

 

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive