8th Tamil Model Notes of Lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
19-08-2024 முதல் 23-08-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
3, 4
4.பாடத்தலைப்பு
உடலை ஓம்புமின் –
கற்கண்டு
கல்வி கரையில -
கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
எச்சம், கல்வி
அழகே அழகு, புத்தியைத் தீட்டு
6.பக்கஎண்
63-73
7.கற்றல் விளைவுகள்
T-821 படிப்பவரின் தரம், எழுத்தின்
நோக்கம் ஆகியவற்றை மனத்திற்கொண்டு பயன் விளையுமாறு தன்னைத்தானே வெளிப்படுத்துதல்,
T-807 கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள்,
நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை
நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்.
8.கற்றல் நோக்கங்கள்
பாடப்பகுதியில்
இடம்பெறும் எச்சங்களைக் கோடிட்டு தெரிநிலைப் பெயரெச்சங்களைப் பட்டியலிட்டு எழுதுதல்
நீதிநெறி
விளக்கம்- நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்பைப் படித்து செய்திகளை
அறிதல். அறிவின் பெருமையை விளக்கும் பாடலைப் படித்தல்
9.நுண்திறன்கள்
கொடுக்கப்பட்ட
எச்சங்களில் குறிப்புப் பெயரெச்சச்
சொற்களைக் கண்டறிந்து எளிய
சொற்றொடர்களை அமைத்தல்
கல்வியின் பெருமை
குறித்த ஔவையார் பாடல்கள் , திருக்குறள் கதைகள் போன்றவற்றைப் படித்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/07/3-echam-8th-tamil-ilakkanam-vina-vidai.html
https://tamilthugal.blogspot.com/2022/08/3-8th-tamil-mindmap-unit-3_31.html
https://tamilthugal.blogspot.com/2020/01/8-1-3.html
https://tamilthugal.blogspot.com/2021/05/4-8th-tamil-kalvi-alage-alagu-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2021/05/4-8th-tamil-puthiyai-theettu-kuruvina.html
11.ஆயத்தப்படுத்துதல்
கல்வியின் சிறப்புகளைக்
கூறச்செய்தல்.
கல்வி குறித்த
பழமொழிகளைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
எச்ச வகைகளை
அறிமுகப்படுத்துதல்.
கல்வி குறித்து
விளக்கி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
எச்சம் குறித்து
மாணவர்களுக்கு விளக்குதல். எச்ச வகைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
கல்வி கற்க நாம் செய்ய
வேண்டியவை குறித்து மாணவர்களிடம் வினவல். கல்வியின் பெருமைகள் குறித்து மாணவர்கள்
அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
அறிவு, அன்பால்
பிறரை வெல்லும் வெற்றி குறித்த தகவல்களை மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.
பாடப்பகுதியில் இடம்பெறும் எச்சங்களைக் கோடிட்டு தெரிநிலைப்
பெயரெச்சங்களைப் பட்டியலிட்டு
எழுதுதல்.
நீதிநெறி விளக்கம்- நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்பைப் படித்து செய்திகளை
அறிதல். அறிவின் பெருமையை விளக்கும் பாடலைப் படித்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
கல்வியின் தேவை குறித்துக் கூறுதல். கல்வியின் அவசியத்தை விளக்குதல். கல்வி
அறிவு குறித்த கூடுதல் தகவல்களை மாணவர்களுக்குக் கூறுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – கற்றவருக்கு அழகு தருவது
..............................
முற்றுப்பெறாமல் எஞ்சி
நிற்கும் சொல் ..............................
ந.சி.வி – யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
வினையெச்சத்தின் வகைகளை எழுதுக.
உ.சி.வி – கல்வியின்
பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
கல்வி குறித்த பழமொழிகளைப் பட்டியலிடுக.
அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளைப் பட்டியலிடுக.