கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 13, 2023

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியார் தமிழ்க் கட்டுரை பேச்சு

 

 

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியார்

முன்னுரை

பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடச் செய்தவன் பாரதி. மகாகவி, தேசியக் கவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவிஞன் என்றெல்லாம் சிறப்புப் பெயர்களைக் கொண்ட எட்டயபுரத்து வேங்கை சுப்பிரமணிய பாரதி. பாரதியைப் புலவர் வரிசையிலே அடைத்து விட முடியாது. சமூகச் சிந்தனையாளன்; பெண் விடுதலைக் கவிஞன்; தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக உயர் சமூகத்தில் இருந்து தனி ஒரு மனிதனாகப் போரிட்ட மாவீரன்; வெள்ளையரின் கொடுமையைத் தன் எழுத்துகளால் எதிர்த்தவன்; தேச ஒற்றுமைக்காகக் குரல் கொடுத்த விடுதலைப் போராட்ட வீரன் இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம். தமிழ்த்துகள்

ஏறத்தாழ 200 ஆண்டு காலம் அடிமை வாழ்வை இந்தியா சந்தித்தது. அடிமை என்றால் என்ன என்று தெரியாத சமூகத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காரணம் நாம் இப்போது சுவாசிக்கும் இந்தியாவின் விடுதலைக்காற்று பல்வேறு விடுதலை வீரர்கள் நாட்டுக்காக விட்ட உயிர் மூச்சு. பாரதியும் விடுதலைப் போராட்டமும் என்ற நோக்கில் என் சிந்தனை குதிரையைக் கொஞ்சம் தட்டி விடுகிறேன்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

கலைமகள் திருவருள்

எட்டயபுரத்தில் சின்னச்சாமி - லட்சுமி இணையருக்கு மகனாக 11 டிசம்பர் 1882 இல் பிறந்தவன் சுப்பையா என்கிற சுப்பிரமணி. பிறந்த ஐந்து ஆண்டுகளில் தாயார் மறைந்துவிட பாட்டி பாகீரதியின் அரவணைப்பில் வளர்ந்த பிள்ளை சுப்பிரமணி. தமிழ்த்துகள்

11 வயதிலேயே கவிதை பாடும் திறன் பெற்ற காரணத்தால் எட்டயபுர அரசவையில்  கொடுக்கப்பட்ட பட்டம் தான் பாரதி. பாரதி என்ற சொல்லுக்குக் கலைமகள் என்று பொருள். அரசியலில் ஒரு அக்கினிக் குஞ்சாக வரப் போகிறான் சுப்பிரமணி என்பதற்கு பிள்ளையார் சுழி போட்ட இடம் எட்டையபுரம். தன் 15 ஆம் வயதில் செல்லம்மாவை மணந்தார் பாரதி. தமிழ்த்துகள்

எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்

எல்லோரும் இந்தியர்கள் எல்லோரும் ஓர் நிறை

எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற பாரதியின் சிந்தனைக்குள்ளே சமத்துவமும் சகோதரத்துவமும் பின்னிப்பிணைந்து கிடக்கின்றன.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

இதழ்ப் பணியில் பாரதி

தம் 16ஆம் வயதில் தந்தையை இழந்த பாரதி 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். அந்தக் காலம் பாரதிக்கு இருண்ட காலமாகவே இருந்தது. 1905இல் காசியில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பாரதியின் விடுதலை வேட்கை கொழுந்து விட்டு எரிந்தது.

1904 முதல் 1906 வரை சுதேசமித்திரன் இதழின் ஆசிரியராகத் தன்னுடைய கருத்துகளை எழுதி வந்தார் பாரதி. விடுதலை உணர்வுமிக்க வரிகள் மக்களைக் கவர்ந்தன. ’இந்தியா’ என்ற இதழைத் தானே தொடங்கி நடத்தி வந்தார். வெள்ளையரின் கண்கள் பாரதியாரை நோக்கித் திரும்பின. பீரங்கி குண்டுகள் என சுட்டுவிடும் வரிகளால் கட்டுரைகள் பல எழுதினார் பாரதியார்.

சக்கரவர்த்தினி, கர்மயோகி, விஜயா, சூர்யோதயம், தர்மம், பாலபாரதா மற்றும் ”ஆர் யங் இந்தியா” என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர் பாரதி.

நாம் இருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் அது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் இந்த

பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரி                     தமிழ்த்துகள்

பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்

என்ற பாரதியின் வரிகள் அடிமைத்தனத்திலிருந்து மீள வேண்டும் நாம் என்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தியது. தமிழ்த்துகள்

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் மாதம் பதினேழரை ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்து வந்த பாரதி மாதம் 40 ரூபாய் சம்பளத்தில் சுதேசமித்திரனில் ஜி.சுப்பிரமணிய ஐயரிடம் வேலைக்குச் சேர்ந்தது வறுமையின் காரணமா? அல்லது விடுதலை வேள்விக்கு இந்தியத் தாய் அழைத்ததன் காரணமா என்று தெரியவில்லை! தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

அரசியல் குருவும் ஞானகுருவும்

பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு தமிழ்த்துகள்

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே என்று பாவேந்தன் பாரதிதாசனை எழுதத் தூண்டியது. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார் என்ற பாரதியின் முரசுப் பாட்டு! பால கங்காதர திலகரைத் தன் அரசியல் குருவாக ஏற்றார் பாரதியார். விவேகானந்தரின் சீடரான நிவேதிதாவை தன் ஞான குருவாக ஏற்றார். தமிழ்த்துகள்

1904 முதல் 1921 வரை அவர் வாழ்வில் விடுதலைத் தீ கனன்றது. வக்கீல் துரைசாமி, வி.சக்கரை செட்டியார், டாக்டர் ஜெயராம், பரலி சு.நெல்லையப்பர், மண்டையம் திருமலாச்சாரி, தமிழ்த் தென்றல் திரு.வி.க, பொதுவுடமைச் சிற்பி சிங்காரவேலர், இராமசேஷையர் ஆகியோரைச் சென்னையில் சந்திக்கும் வாய்ப்பு பாரதிக்குக் கிடைத்தது. விடுதலை முழக்கம் அவர் கவிதையில் பிறந்தது.

வ.உ.சி.யும் பாரதியும்

வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் அடி

மேலை கடல் முழுவதும் கப்பல் விடுவோம்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் தமிழ்த்துகள்

பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!

என்ற பாரதியின் வரிகள் வ.உ.சி.யுடன் கொண்ட நட்பின் பிறகு பிறந்தவை. வெள்ளையரை எதிர்த்து சுதேசிக் கப்பல் நடத்திய வ.உ.சி.யை வானளாவப் புகழ்ந்தார் பாரதி. 1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையை எதிர்த்து சென்னை கடற்கரையில் பாரதி பாடிய ‘வங்கமே வாழிய’ என்ற பாடல் இந்தியர் இதயங்களைத் தொட்டது; வெள்ளையர் மூளையைச் சுட்டது. அரசியலில் தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டார் பாரதியார்.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

 

1906 இல் விஜயவாடாவுக்குச் சென்று விப்பின் சந்திரபாலை அழைத்து வந்து சென்னைக் கடற்கரையில் பேச வைத்தார். 1907-இல் நடைபெற்ற சூரத் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். வ.உ.சி.யுடன் மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற கலகத்தால் மனதில் தேசத்தின் மீது தீவிரப் பற்றுக் கொண்ட தீவிரவாதியாக சென்னை வந்து சேர்ந்தார்.

1908இல் லட்சுமண ஐயா என்பவர் தேசப்பற்று மிக்க பேச்சை மேடையில் தந்ததற்காக தண்டிக்கப்பட்டார். சிறைக்குச் சென்று விடுதலையான அவருக்குப் பாராட்டும் பரிசும் கொடுத்தார் பாரதி. அதே நேரத்தில் 1911இல் வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்றதை அவர் ஏற்கவில்லை. இதனால் வவேசு ஐயர் போன்ற தீவிர பற்றாளர்களிடமிருந்து விலகினார் பாரதி.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

பாண்டிச்சேரியில் பாரதி

21-08-1908 முதல் 21-11-1918 வரை பாரதியார் பாண்டிச்சேரியில் தங்கி இருந்தார். இந்தியா பத்திரிக்கையில் அவர் எழுதிய கட்டுரைகளுக்காகச் சிறையில் தள்ள முடிவு செய்தது ஆங்கிலேய அரசு. ரகசிய காவல் படை மூலம் வெள்ளையர்கள் பாரதியைக் கண்காணித்து வந்தார்கள்.

மண்ணும் இமயமலை எங்கள் மலையே

மாநில மீதிது போல் பிறிதிலையே

இன்னரு நீர்க் கங்கை ஆறெங்கள் ஆறே தமிழ்த்துகள்

இங்கிதன் மாண்பிற்கு எதிர் எது வேறே? என்ற பாரதியின் வைர வரிகள் தேச ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. ‘தனிமை இரக்கம்’ என்ற தலைப்பில் விவேக பானு பத்திரிகையில் வெளிவந்த பாரதியின் கவிதை தொடங்கி தன் உயிர் மூச்சை நிறுத்தும் வரை வெளிவந்த அவரது கவிதைகள் அனைத்தும் புதுக்கவிதை வடிவம் கொண்டவை. புரட்சி மிக்க வரிகள் யாப்புக் கட்டுகளை உடைத்து வெளிவந்தவை.

இன்றைய புதுக்கவிதை வடிவத்திற்கு வித்திட்டவர் பாரதி. பாண்டிச்சேரியில் தங்கி இருந்த காலத்தில் மகான் அரவிந்தரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது பாரதிக்கு.  மகாகவி என்ற பட்டத்தைக் கொடுத்து அவரது வாழ்க்கை வரலாறை எழுதிய வ.ரா. அவர்களையும் அங்கு தான் சந்தித்தார் பாரதி. பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்தவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்ட பாரதிதாசன் உள்ளிட்ட கவிஞர்கள் சந்திப்பு அங்கே தான் நடைபெற்றது.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

பாரதியும் காந்தியும்

தென்னாப்பிரிக்க இனவெறிக்கு எதிராக காந்தியடிகள் போராடிக் கொண்டிருந்தபோதே காந்தியடிகளைக் குறிப்பிட்டு தன்னுடைய இதழில் ‘பசு‘ படம் ஒன்றை வரைந்து வரவேற்றவர் பாரதி. இந்தியாவை அடிமைத் தளையில் இருந்து மீட்க வருகிறார் காந்தியடிகள் என்பதை இந்திய மக்களுக்குச் சொன்னவர் பாரதி.             தமிழ்த்துகள்

1919 ஆம் ஆண்டு சென்னை வந்த காந்தியடிகள் ராஜாஜியின் இல்லத்தில் நான்கு நாட்கள் தங்கினார். அப்போது அன்று மாலை நடைபெற இருக்கும் கடற்கரை கூட்டத்தில் காந்தியடிகளால் உரையாற்ற முடியுமா என்று கேட்பதற்காக பாரதியார் வந்தார். எனக்கு வேறு வேலை இருக்கிறது இன்னொரு நாள் கூட்டத்தை வைத்துக் கொள்ள முடியுமா என்ற காந்தியடிகளின் கோரிக்கைக்கு முடியாது; தங்கள் இயக்கம் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியபடி முறுக்கு மீசையோடு நகர்ந்து வந்தவர் தான் பாரதி. அப்போது காந்தியடிகள் ராஜாஜியிடம் சொன்னாராம் இவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று! தமிழ்த்துகள்

1915இல் ரவீந்திரநாத் தாகூர் காந்தியடிகளைச் சந்தித்த பின்னர் தான் மகாத்மா என்ற பட்டத்தை தாகூர் காந்தியடிகளுக்குக் கொடுத்தார். ஆனால் பாரதியாரோ வாழ்க நீ எம்மான் மகாத்மா வாழ்க! என்று 1910இல் எழுதிய கவிதையிலேயே காந்தியடிகளைக் குறிப்பிட்டு இருந்தார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு உடல் நலம் குன்றி 1921 செப்டம்பர் பதினோறாம் நாள் தம் 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார் பாரதியார்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

முடிவுரை

ஆடுவோமே பள்ளு பாடுவோமே               தமிழ்த்துகள்

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று விடுதலை அடையும் முன்னே விடுதலைக் கும்மி கொட்டியவன் பாரதி. உலக அரசியலை ஒவ்வொரு அங்கமாக அலசி தன்னுடைய கவிதைகளில் வடித்தவன் பாரதி. விதவை மறுமணம், பெண் விடுதலை, தீண்டாமைக் கொடுமை என்ற தன்னுடைய கருத்துகளில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் எழுதவும் பேசவும் செய்தவன் பாரதி. வெள்ளையர் அரசை எதிர்த்து பாண்டிச்சேரியில் இருந்து இந்தியா பத்திரிக்கை தன் நண்பர்கள் உதவியுடன் தொடர்ந்து வெளிவரச் செய்தவன் பாரதி.

இதம் தரும் மனையின் நீங்கி

இடர்மிகு சிறைப்பட்டாலும்

பதம் திரு இரண்டும் மாறிப்

பழி மிகுந்து இழிவுற்றாலும்

விதந்தரு கோடி இன்னல்

விளைந்து என்னை அழித்திட்டாலும்                          தமிழ்த்துகள்

சுதந்திர தேவி நின்னைத்

தொழுதிடல் மறக்கிலேனே என்று பாடிய மகாகவி பாரதியின் தேசப்பற்றும் அரசியல் பயணமும் விடுதலை! விடுதலை! என்ற முழக்கத்தோடு அவர் நடத்திய இதழ்ப்பணியும் விண்ணும் மண்ணும் உள்ளவரை இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கும் இதில் எள்ளளவும் ஐயமில்லை!

-        கவிஞர் கல்லூரணி முத்து முருகன் 9443323199

                   தமிழ்த்துகள்

 

மு.முத்துமுருகன், தமிழாசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ம.இரெட்டியபட்டி. தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive