கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 13, 2023

வேற்றுமையில் ஒற்றுமை தமிழ்க் கட்டுரை பேச்சு

 

 

வேற்றுமையில் ஒற்றுமை

முன்னுரை

          பாரத நாடு பழம்பெரும் நாடு            தமிழ்த்துகள்

           நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் என்றார் மகாகவி பாரதியார். சாதி, மத, இன, மொழிகளால் நாம் வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வால் ஒன்றுபட்டு இருக்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பாரத நாட்டின் வேத மந்திரம்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே -அவர்                                       தமிழ்த்துகள்

சிந்தையில் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே என்ற சிந்தனையோடு வேற்றுமையில் ஒற்றுமை குறித்து இக்கட்டுரையில் காண்போம்.                      தமிழ்த்துகள்

சிந்து நதியின் மிசை நிலவினிலே

          பைந்தமிழ்த் தேர்ப் பாகன் பாரதி

சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேரநன் னாட்டு இளம் பெண்களுடனே தமிழ்த்துகள்

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்

தோணிகளோட்டி விளையாடி வருவோம் என்று பாடினார். அது மட்டுமல்ல தமிழ்த்துகள்

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு

சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் என்று தேசிய ஒருமைப்பாட்டைத் தூக்கிப் பிடித்த கவிஞர் தேசியக் கவி பாரதியார். பல மாநிலங்கள் இருந்தாலும் ஒன்றுக்கொன்று உதவியாய் இங்கு விளைவதை அங்கும் அங்கு விளைவதை இங்கும் பெற்று- கொடுத்து ஒற்றுமையை வளர்த்து வருகிறோம். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

இனமொழி வேறுபாடுகள்

          இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை சுமார் 1600 ஆகும். இந்திய ரூபாய் நோட்டுகளில் 18 மொழிகளில் அதன் மதிப்பு எழுதப்பட்டு இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22. மொழிவாரி மாநிலங்கள் 1956இல் பிரிக்கப்பட்டன. இது எண்ணிக்கையில் 14 ஆகவும் யூனியன் பிரதேசங்கள் எண்ணிக்கையில் ஆறாகவும் இருந்தது. தமிழ்த்துகள்

          முப்பது கோடி முகமுடையாள்உயிர் மெய்ம்புற ஒன்றுடையாள்- இவள்

          செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள் என்றார் பாரதியார். இந்தியத்தாய் 30 கோடி முகமுடையாளாக இருந்த போது இருந்த ஒற்றுமை இன்றைக்கு 150 கோடியை எட்டிவிட்ட போதும் அதாவது 5 மடங்கு உயர்ந்துவிட்ட போதும் அதே ஒற்றுமையோடு திகழ்கிறாள். நாட்டுப் பண், தேசியச் சின்னங்களான தேசியப் பறவை மயில், தேசிய மரம் ஆலமரம், நான்முகச் சிங்கம் எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச்சட்டம் இவற்றை மதித்துப் போற்றுகிறோம்.

விடுதலைப் போராட்ட வீரர்கள்

          இந்திய விடுதலை நாள் விழாவையும் இந்தியக் குடியரசு நாள் விழாவையும் நாடு முழுவதும் சிறப்புடன் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு கொண்டாடுகிறோம். அன்று மராட்டியச் சிங்கம் பால கங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, குஜராத்தின் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, வங்காளத்தின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் கான் அப்துல் கபர்கான், காஷ்மீரத்தின் மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, ஆந்திராவின் விபின் சந்திரபால், தமிழ்நாட்டின் ராஜாஜி, தந்தை பெரியார், வ.உ.சிதம்பரனார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தீரர் சத்தியமூர்த்தி போன்ற பெரும் தலைவர்கள் இந்திய விடுதலைக்காக இனம், மொழி கடந்து இந்தியர் என்ற உணர்வால் ஒன்றுபட்டு விடுதலை பெற்றுத் தந்தனர். தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு                            தமிழ்த்துகள்

            கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்று பாடினார் நாமக்கல் கவிஞர். அகிம்சை என்னும் உண்மை வழி நின்று விடுதலை பெற்றுத் தந்தார் மகாத்மா காந்தி. அதன் பின்னர் பாகிஸ்தான் 1965, 1971, 1999 ஆம் ஆண்டுகளிலும் 1962இல் சீனாவுடன் நடந்த போர்களில் இந்தியாவின் முப்படையினரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றியைத் தேடித் தந்தனர். தமிழ்த்துகள்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

முடிவுரை

200 ஆண்டு காலம் வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள் எனப் பிரிந்து கிடந்ததால் வெள்ளையர்கள் நயவஞ்சகமாக நம்மை ஆண்டனர். இன்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக நாம் விளங்குகிறோம். தமிழ்த்துகள்

சாதி, மத, இன, மொழி வேற்றுமைகளை மறந்து பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை ஆகும்.

தண்ணீர்விட்டா வளர்த்தோம் சர்வேசா

கண்ணீரால் காத்தோம் கருகத்திருஉளமோ?                           தமிழ்த்துகள்

 - என்ற பாரதியின் வைர வரிகளை மனதில் பதிப்போம் வல்லரசு இந்தியாவின் வெற்றிக்குத் துணை நிற்போம்!

தமிழ்த்துகள்

கவிஞர் கல்லூரணி முத்து முருகன் – 9443323199

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive