கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 13, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கப்பலோட்டிய தமிழர்

7வது தமிழ் மாதிரி பாடக் குறிப்புகள்

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

21- 08 - 202 3 முதல் 25- 0 8- 202 3

2.பருவம்

1

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

நாடு அதை நாடு – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

கப்பலோட்டிய தமிழர்

6.பக்கஎண்

63-66

7.கற்றல் விளைவுகள்

T-704 தாங்கள் படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து அவற்றின்மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கிவைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.

8.திறன்கள்

நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட தலைவரைப் பற்றி அறியும் திறன்

நாட்டுக்குழைத்த தலைவர்களின் வரலாறு மூலம் தமிழர் நாட்டுப்பற்றை அறியும் திறன்

9.நுண்திறன்கள்

நாட்டுப்பற்றில் சிறந்து விளங்கிய ஆளுமைகள் குறித்த தகவல்களைப் பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_19.html

https://tamilthugal.blogspot.com/2021/08/kappalottiya-tamilar-7th-virivaanam-pdf.html

https://tamilthugal.blogspot.com/2020/04/kappalottiya-thamilar-v-o-chidambaranar.html

https://tamilthugal.blogspot.com/2021/08/kappalottiya-tamilar-7th-virivaanam.html

https://tamilthugal.blogspot.com/2022/08/1-3-7th-tamil-mindmap-term-1-unit-3_23.html

11.ஆயத்தப்படுத்துதல்

மாணவர்கள் அறிந்த தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த விடுதலைப் போராட்டம் குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழர் வீரத்தைக் கூறிப் பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

வ.உ.சிதம்பரனார் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          சுதேசக் கப்பல் கம்பெனி குறித்த தகவல்களை மாணவர்களிடம் கூறுதல். திலகர், பாரதியார் குறித்த தகவல்களை விளக்குதல். வந்தேமாதரம் என்ற சொல்லின் வலிமையை மாணவர்களுக்கு உணர்த்துதல்.

          சிதம்பரனார் சிறையில் படித்த நூல்கள், எழுதிய நூல்கள் பற்றிக் கூறுதல். நூல்கள் வாசிக்கும் பழக்கத்தின் அவசியத்தைக் கூறுதல். நாட்டுப்பற்றில் தமிழரின் பங்கை அறிதல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கதைப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

விடுதலைப் போராட்டங்களை அறியச் செய்தல். தமிழரின் நாட்டுப்பற்றை உணரச் செய்தல். விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை உணர்தல்.

15.மதிப்பீடு

          LOT – கப்பலோட்டிய தமிழர் எனப்படுபவர் ..............................

          MOT – சிதம்பரனார் குறித்த தகவல்களை எழுதுக.

HOT உனக்குப் பிடித்த விடுதலைப்போராட்ட வீரர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீதிற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை அறிந்து எழுதுங்கள்.

வ.உ.சிதம்பரனார் குறித்த தகவல்களையும் பெருமைகளையும் இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive