8th Tamil Model Notes of lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
02-09-2024 முதல் 06-09-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
4
4.பாடத்தலைப்பு
கல்வி கரையில –
கற்கண்டு.
5.உட்பாடத்தலைப்பு
வேற்றுமை
6.பக்கஎண்
84-92
7.கற்றல் விளைவுகள்
T-816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில்
எழுதும் போது பயன்படுத்துதல் (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில்
ஏற்படும் ஒசை நயத்தைப் புரிந்து கொள்ளுதல்).
8.கற்றல் நோக்கங்கள்
கொடுக்கப்பட்ட சொற்றொடர்களில் எழுவாய், செயப்படுபொருள் பயனிலைகளை அட்டவணைப்படுத்தி எழுதுதல்
9.நுண்திறன்கள்
வேற்றுமை உருபுகளையும் அவற்றின் பொருள்களையும்
அட்டவணைப்படுத்தி எழுதுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
11.ஆயத்தப்படுத்துதல்
வேற்றுமை உருபுகள் இல்லாத தொடர்களைக் கூறி பொருள் வேறுபடுவதை உணர்த்துதல்.
12.அறிமுகம்
வேற்றுமை வகைகளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
வேற்றுமை குறித்து
மாணவர்களுக்கு விளக்குதல். வேற்றுமை வகைகள் குறித்து மாணவர்களுடன்
கலந்துரையாடுதல்.
வேற்றுமை வரும் பொருள்களை
மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.
வேற்றுமை உருபுகளையும்
சொல்லுருபுகளையும் பொருளையும் மாணவர்களுக்கு விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை
உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
வேற்றுமையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – பெயர்ச்சொல்லின் பொருளை
வேறுபடுத்துவது ..............................
ந.சி.வி – உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?
எழுவாய் வேற்றுமையை விளக்குக.
உ.சி.வி – ஆன்ற
குடிப்பிறத்தல் பாடப்பகுதியில் உள்ள ஒரு பத்தியிலிருந்து வேற்றுமை உருபுகளை
எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நான்காம் வேற்றுமைக்குப் புதிய எடுத்துக்காட்டுகளை எழுதுக.