கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, August 21, 2023

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பல்துறைக்கல்வி, ஆன்ற குடிப்பிறத்தல்

8th Tamil Model Notes Of Lesson

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

27-08-2024 முதல் 31-08-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

4

4.பாடத்தலைப்பு

கல்வி கரையில – உரைநடை உலகம், விரிவானம்.

5.உட்பாடத்தலைப்பு

பல்துறைக்கல்வி, ஆன்ற குடிப்பிறத்தல்

6.பக்கஎண்

74-83

7.கற்றல் விளைவுகள்

T-820 கைவினைப் பொருள்கள் தயாரித்தல் கட்டடக்கலை, உழவுத்தொழில், விதை விதைத்தல், நாட்டியம் மெய்ப்பாடுகள் முதலான செயல்பாடுகளில் பயன்படும் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல்.

T-821 படிப்பவர், எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனத்திற்கொண்டு பயன்தருமாறு தம்மைத்தாமே வெளிப்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

பல்துறைக் கல்வி பாடப்பொருளைப் பொருளுணர்ந்து படித்தல்.

'ஆன்ற குடிப்பிறத்தல்' என்னும்   கதையினை உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் கருத்துக் கூறுதல்.

9.நுண்திறன்கள்

திரு.வி.க.வின் கல்விச் சீர்த்திருத்தச் சிந்தனைகளை எழுதுதல்.

'பண்புடைமை' என்னும் தலைப்பிலுள்ள திருக்குறள் கதைகளைப் படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்



இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_80.html

https://tamilthugal.blogspot.com/2021/05/4-8th-tamil-palthurai-kalvi-kuruvina.html

https://tamilthugal.blogspot.com/2022/06/thiruvikalyana-sundaranar.html

11.ஆயத்தப்படுத்துதல்

கல்வியின் சிறப்புகளைக் கூறச்செய்தல்.

திருக்குறள் கதைகளைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

கல்வி வகைகளை அறிமுகப்படுத்துதல்.

கல்வியின் பெருமை குறித்து விளக்கி, கதையை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பல்துறைக்கல்வி குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். ஏட்டுக்கல்வி, தாய்மொழிவழிக்கல்வி, தமிழ்வழிக் கல்வி, காப்பியக் கல்வி, இயற்கைக் கல்வி, இசைக்கல்வி, நாடகக் கல்வி, அறிவியல் கல்வி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          திரு.வி.க. குறித்து மாணவர்களிடம் வினவல். கல்வியின் பெருமைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

          ஆன்ற குடிப்பிறத்தல் கதை குறித்த தகவல்களை மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கல்வியின் தேவை குறித்துக் கூறுதல். கல்வியின் அவசியத்தை விளக்குதல். கல்வி அறிவு குறித்த கதையை மாணவர்களுக்குக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ..............................

          ந.சி.வி – தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?

                   அறிவியல் கல்வி பற்றி எழுதுக.
          உ.சி.வி – நீங்கள் கற்க விரும்பும் கல்வி குறித்து எழுதுக.

                   திருக்குறள் கருத்தை உணர்த்தும் கதையை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

கல்வி குறித்த பழமொழிகளைப் பட்டியலிடுக.

அறிவின் பெருமையை விளக்கும் கதைகளை அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive