சுதந்திரம் போற்றுவோம்...
வீர சுதந்திர வேள்விக்கு விடுதலை
வீரர் சிந்திய ரத்தம் பெரிதாகும்.....
அதைவிட இந்தியப் பெருங்கடல் சிறிதாகும்
தீரர் புரிந்த தியாகத்திற்கு
இமயமலையும் ஓர் கடுகாகும் ....
இந்திய எல்லைகள் யாவும்
நம்மவர் மார்பு பெற்ற வடுவாகும் ....
தேக்கு மரமெனும் தேகமெல்லாம்
தீயின் நாவுக்குத் தின்னக் கொடுத்தார்
.....
தூக்கு மேடை பலவற்றை அவர்
தூளி எனவே கருதி நின்றார் ......
நீரில் பூத்த பூவல்ல இது
நிலத்தில் முளைத்த செடியல்ல...
நெருப்பில் பூத்த தங்கமடா அந்த
அடுப்பில் எறிந்தது நம் தியாகிகளின் அங்கமடா
......
கூட்டுப் புழுக்களாய்த் தான் குறுகி
நாட்டு விடுதலை பெற்றுத்தந்த
மாற்று இல்லா தங்க வார்ப்புகளை
மன்றில் ஏறி முழங்கிடுவோம் அந்த
மாவீரர்தம் போர்ப்புகழை
வீர சுதந்திரம் போற்றிடுவோம்
மாவீரர்கள் காலடி போற்றிடுவோம்.....
- கவிஞர் சுரேஷ் இராமலிங்கம், காரியாபட்டி.