கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 13, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நிகழ்கலை, பூத்தொடுத்தல், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், கம்பராமாயணம்.

10th Tamil Model Notes of Lesson

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

21-08-2023 முதல் 25-08-2023

2.பாடம்

தமிழ்

3.அலகு

6

4.பாடத்தலைப்பு

நிலாமுற்றம் – உரைநடை உலகம், கவிதைப்பேழை.

5.உட்பாடத்தலைப்பு

நிகழ்கலை, பூத்தொடுத்தல், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், கம்பராமாயணம்.

6.பக்கஎண்

128 - 138

7.கற்றல் விளைவுகள்

T-1025 தமிழர்தம் நிகழ்கலைகளின் மேன்மையறிந்து, அவற்றை வளர்க்கவும் நிலைபெறச் செய்யவும் மொழிவழியாகத் தங்களின் பங்களிப்பைத் தருதல்..

T-1026 எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறமறிந்து கவிதை படித்தல், படைத்தல்.

T-1028         அழகியலும் கலைநயமும் இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை அறிந்து செய்யுளைப் படித்தல் அதனுள் பொதிந்துள்ள பொருள், சொல், ஓசைநயங்களை உணர்ந்து இலக்கியம் பயிலும் ஆர்வம் பெறல். நாநெகிழ், நாபிறழ் பயிற்சிகளில் ஆற்றல் பெறுதல்.

8.திறன்கள்

தாம் பார்த்த நிகழ்கலைகள் குறித்த அனுபவத்தைக் கூறச் செய்தல்.

கவிதையைப் படித்து அதன் மையக் கருத்தை அறிந்து எழுதுதல்.

பாடப்பகுதியில் அமைந்த பாடலைச் சீர்பிரித்துப் படித்தல், புதிய சொற்களுக்குப் பொருளறிதல்.

9.நுண்திறன்கள்

புதுக்கவிதைகளைப் படித்தல்.

கலைகளின் மேன்மை பற்றி வகுப்பறையில் பேசுதல்.

பாடலைப் படித்து நாபிறழ், நாநெகிழ் பயிற்சி பெறுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்






இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/06/10-pdf-10th-tamil-inviting-letter.html

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_95.html

https://tamilthugal.blogspot.com/2020/02/6-1-tenth-tamil-unit-6-one-word-online.html

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_60.html

https://tamilthugal.blogspot.com/2021/07/6-10th-tamil-online-test-poothoduthal.html

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_29.html

https://tamilthugal.blogspot.com/2019/05/muthukkumaarasaami-pillaitamil.html

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_2.html

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_78.html

https://tamilthugal.blogspot.com/2019/07/blog-post_98.html

https://tamilthugal.blogspot.com/2021/07/6-10th-tamil-online-test.html

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_46.html

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_7.html

https://tamilthugal.blogspot.com/2019/05/kambaramayanam-ayothiya-kaandam.html

https://tamilthugal.blogspot.com/2019/05/kambaramayanam-balakaandam.html

https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_12.html

https://tamilthugal.blogspot.com/2020/06/tamil-online-test-with-e-certificate.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_71.html

https://tamilthugal.blogspot.com/2021/07/6-10th-tamil-online-test-kamba.html

https://tamilthugal.blogspot.com/2020/07/tamil-tongue-twisters-naa-neki.html

11.ஆயத்தப்படுத்துதல்

          நாபிறழ் பயிற்சித் தொடர்களைக் கூறச் செய்தல்.

          பொழுதுபோக்குகளைக் கேட்டல்.

12.அறிமுகம்

கலைகள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

புதுக்கவிதையை நயத்துடன் அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

மக்கள் பண்பாட்டின் பதிவுகளான கலைகளின் பெருமையை அறியச் செய்தல். கலைகளை விளக்குதல். நிகழ்கலைகளில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் பற்றி படித்தறிதல். தங்கள் சுற்றுப்புறத்தில் நிகழ்த்தப்படும் நிகழ்கலைகளைப் பாடப்பகுதியில் கூறப்பட்டுள்ளவற்றோடு ஒப்பிடுதல்.

          பிள்ளைத்தமிழ் வகைகளை விளக்குதல். பருவங்கள் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல். செய்யுளில் சந்தநயம் குறித்து அறியச் செய்தல்.

          கலையின் பெருமையை மாணவர்கள் மனதில் விதைத்தல். கம்பரின் கவிநயம், சந்த நயம் அறிதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். கல்வியின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கலைஞர்களுக்கு அளிக்கப்படும் பட்டங்கள், பரிசுகள் குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல்

சொற்களுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் எழுதுதல்

15.மதிப்பீடு

LOT குமரகுருபரரின் காலம் ..............

          கவிஞர் உமா மகேஸ்வரி எந்த மாவட்டத்தில் பிறந்தவர்?

MOT – தெருக்கூத்தை விளக்குக.

          கம்பராமாயணம் குறித்து எழுதுக.

HOT – நிகழ்கலைகளைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியன குறித்து எழுதுக.

          சந்தக்கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

நிகழ்கலைகள் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.

கம்பர் குறித்து அறிந்து வருதல்.

புதுக்கவிதை ஒன்று படைத்தல்.

தமிழ்த்துகள்

Blog Archive