kalaignar kavithai 1
கலைஞர் நூற்றாண்டு
விழா கவிதை 1
தஞ்சை வளநாடு தந்த
தனிச்சொத்து
அஞ்சுகத்தாய்
வயிற்றுதித்த அருவித்து
வெஞ்சமர் களங்கண்ட
வீர வேங்கை
நெஞ்சமெலாம்
நிறைத்திருப்பார் தமிழணங்கை
கொஞ்சுமொழி பேசிடுமே
காதற்கவிதை
வஞ்சகரைக்
கருவறுக்கும் வீரக்கவிதை
தஞ்சமென வந்தோரின்
தானைத் தலைவர்
அஞ்சிடாத சிங்கமாம்
அவர்தான் கலைஞர்
சுயமரியாதைச் சுடர்
விட்ட உதயசூரியன்
பயமறியாது பகை
முடிப்பதிலோ காரியன்
நயமான வசனங்களை
நாளுந் தந்தவன்
நியாயமான
சிந்தனைகளின் நல் வித்தவன்
ஈரோட்டுப் பெரியாரின்
இனமான வீரன்
ஏரோட்டும் பாமரனுக்
கென்றுமிவன் தோழன்
பார் போற்றும்
பேரறிஞர் அண்ணாவின் தம்பி
ஊர் போற்றச்
செந்தமிழை உலவவிட்ட தும்பி
வாழ்வழிக்க வந்த
வடக்கை அடக்கிய பேனா
வீழ்ந்திடாத வீரம்
தான் கருணாநிதி என்பேனா
ஆழ்ந்த
கருத்துக்காய்ப் பராசக்தியில் திறந்ததிந்தப் பேனா
ஆழ்ந்திருக்கிற
தமைதியாய்க் கடற்கரையி லென்பேனா?
- கவிஞர் கல்லூரணி முத்து முருகன்
9443323199