8th Tamil model notes of Lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
18-11-2024 முதல் 22-11-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
7
4.பாடத்தலைப்பு
பாருக்குள்ளே நல்ல
நாடு - கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
படைவேழம்,
விடுதலைத் திருநாள்
6.பக்கஎண்
144 - 149
7.கற்றல் விளைவுகள்
T-812 படிக்கும்போது
படைப்பாளியின் சொற் சித்திரத்தினை நயம்படப் பாராட்டிக் கல்வி நிலைக்கு ஏற்ப
வெளிப்படுத்துதல். (பேச்சு, எழுத்து, சைகைவழியில்).
T-809 படித்தவற்றைப் பற்றி
நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.
8.கற்றல் நோக்கங்கள்
சிற்றிலக்கியங்களில்
உள்ள இலக்கிய நயங்களை நுகர்தல்.
தேசிய விழாக்களின்
சிறப்பினை உணர்ந்து கொண்டாடுதல்.
9.நுண்திறன்கள்
தமிழர்களின்
போர்த்திறன் குறித்து அறியும் திறன்.
தேசத்தை வழிபடும்
பாடல் குறித்து அறியும் திறன்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_11.html
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_95.html
தமிழ்த்துகள்:
படைவேழம் மனப்பாடப்பாடல்
வகுப்பு 8 இயல் 7
PADAI VEZHAM (tamilthugal.blogspot.com)
11.ஆயத்தப்படுத்துதல்
போர் குறித்து
மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
நாடு வளம்பெற நாம்
செய்ய வேண்டிய செயல்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
கலிங்கத்துப்பரணியை
அறிமுகப்படுத்துதல்.
விடுதலைத்
திருநாளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் படைவேழம்
பாடலை வாசித்துப் பொருள் கூறுதல், மாணவர்களும் பாடலை வாசித்தல். சோழ நாட்டின் போர்ச்
சிறப்புகள் குறித்து விளக்குதல். மாணவர்கள் அறிந்த வீரம் குறித்துக் கூறச்செய்தல்.
நாட்டுப்பற்றின் அவசியம் பற்றி மாணவர்களைக் கூறச்செய்தல். மாணவர்கள் அறிந்த தேசத்தலைவர்களைக் கூறச்செய்தல். விடுதலை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழரின் வீரம் குறித்துக் கூறுதல். நாட்டுப் பற்று, தேசத்
தலைவர்கள் குறித்துக் கூறுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – முழை என்பதன் பொருள்
..............................
வையம் என்பதன் பொருள்
.....................................
ந.சி.வி – பகத்சிங் கண்ட கனவு யாது?
கலிங்க வீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?
உ.சி.வி – நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையானவைகளைப் பட்டியலிடுக.
விடுதலை நாளன்று மக்கள் செய்ய
வேண்டியவைகளை எழுது.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
போர் தொடர்பான பாடல்களைப் பட்டியலிடுக.
இந்தியாவின் பெருமைகளை இணையம் மூலம் அறிதல்.