கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, November 05, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு

  9th Tamil model notes of Lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

14-11-2023 முதல் 18-11-2023

2.பாடம்

தமிழ்

3.அலகு

7

4.பாடத்தலைப்பு

வாழிய நிலனே – உரைநடை உலகம்.

5.உட்பாடத்தலைப்பு

இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு.

6.பக்கஎண்

182 - 185

7.கற்றல் விளைவுகள்

T-9032 விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய தொண்டினை உணர்ந்து நாட்டுணர்வு  பெறுதல், அதனை மொழியின் வாயிலாக வெளிப்படுத்துதல், சமூகத்திற்கு தம்மால் இயன்ற பணிகளை அளிக்கத் தாமாக முன்வருதல்.

8.கற்றல் நோக்கங்கள்

இந்திய தேசிய இராணுவப்படையில் போராடிய தமிழர்களின் பங்கு குறித்து அறிதல்.

9.நுண்திறன்கள்

வாழ்வின் பொருள், தாய்நாட்டைக் காப்பதில் இராணுவத்தின் தியாகம் பற்றிப் பேசுதல்.

இந்திய இராணுவத் தூண்கள், மகளிர் படை, இரண்டாம் உலகப்போர்க்காலம் பற்றி படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்


இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_39.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_14.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_77.html

https://tamilthugal.blogspot.com/2022/03/9-7-9th-tamil-online-test-india-thesiya.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-9th-big-question-answer.html

11.ஆயத்தப்படுத்துதல்

          இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

இந்திய இராணுவத்தையும் அதன் சிறப்பையும் அறிதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          இந்திய இராணுவம் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          வான்படை, மகளிர் படை குறித்து விளக்குதல்.

நேதாஜியின் சிறப்பு குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக நாட்டுப்பற்று குறித்து உரைத்தல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          இராணுவம் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.

          தமிழர்களின் வீரத்தையும் அவர்களின் சிறப்புகளையும் அறிதல்.

15.மதிப்பீடு

          LOT இந்திய தேசிய இராணுவத்தில் ............................. பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது.

          MOT – டெல்லி சலோ - விளக்குக.

HOT உனக்குப் பிடித்த  தமிழக விடுதலைப்போராட்ட வீரர் குறித்து சுருக்கமாக எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          உனக்குப் பிடித்த விடுதலைப் போராட்ட வீரர்களை எழுதுக.

நேதாஜி குறித்த தகவல்களைத் திரட்டுக.

தமிழ்த்துகள்

Blog Archive