10th Tamil model notes of Lesson
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
18-11-2024 முதல் 22-11-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
9
4.பாடத்தலைப்பு
அன்பின் மொழி – உரைநடை
உலகம்.
5.உட்பாடத்தலைப்பு
ஜெயகாந்தம்
6.பக்கஎண்
204 - 210
7.கற்றல் விளைவுகள்
T-1045 மாற்றுச் சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து
அடையாளம் காட்டுவதைப் படித்துணர்ந்து, அதுபோன்று சிந்திக்கும் ஆற்றல் பெறுதல். ஆளுமையை மையமிட்ட கருத்துகளைத் தொகுத்து
முறைப்படுத்தச் சீர்மையுடன் இதழ் வடிவில் வெளிப்படுத்துதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
இலக்கியவாதிகள் குறித்த அறிமுகம் பெற்று மேலும் கற்க ஆர்வம் கொள்ளுதல்.
9.நுண்திறன்கள்
ஜெயகாந்தன் என்ற
ஆளுமையின் எழுத்து பற்றி சிந்திக்கும் ஆற்றல் பெறுதல்.
சிறுகதை
வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தின் பண்புநலன் பற்றி பேசுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_4.html
https://tamilthugal.blogspot.com/2020/02/9-tenth-tamil-unit-9-one-word-online.html
https://tamilthugal.blogspot.com/2022/06/10th-tamil-big-question-unit-9.html
https://tamilthugal.blogspot.com/2020/11/10th-tamil-big-question-unit-9.html
https://tamilthugal.blogspot.com/2022/06/jeyakanthan-tenth-tamil-big-q.html
11.ஆயத்தப்படுத்துதல்
எழுத்தாளர்கள்
பற்றிக் கூறச் செய்தல்.
நினைவு
இதழ் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கேட்டல்.
12.அறிமுகம்
ஜெயகாந்தன் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
ஜெயகாந்தன் குறித்து விளக்குதல்.
நினைவு இதழ் குறித்து மாணவர்களுடன்
கலந்துரையாடுதல். சிறுகதை குறித்து மாணவர்கள் பேசுதல். இலக்கிய வடிவங்களை அறிதல். விருதுகள், முன்னுரை, கவிதை, நூல்கள் ஆகியவற்றை
விளக்குதல்.
மாணவர்களிடம் படைப்பாற்றலை
உருவாக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப்
போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
ஜெயகாந்தன் குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – ஜெயகாந்தன் பிறந்த
ஆண்டு ................
ந.சி.வி – ஜெயகாந்தன் பெற்ற
விருதுகளை எழுதுக.
உ.சி.வி – ஜெயகாந்தன் நினைவு இதழுக்கான மாதிரி சுவரொட்டி உருவாக்குக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
ஜெயகாந்தன் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.
சிறுகதை எழுத முயலுதல்.