கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, February 04, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-02-2026. புதன்

School morning prayer activities 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

04-02-2026. புதன் 

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

; இயல்: துறவறவியல் ;

அதிகாரம்: வெகுளாமை

குறள் எண் : 304.

குறள் :

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் பகையும் உளவோ பிற.

உரை :

முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

பழமொழி :

தினசரி சிறு முயற்சிகள் பெரிய பலனை தரும்.

Small efforts daily lead to big results.

இரண்டொழுக்க பண்புகள்:

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி :

இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள். - ஔவையார்

பொது அறிவு :

01. ஆழ்கடல் ஆய்வுக்காக பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் முக்கிய ஆய்வுக் கப்பல் எது?

HMS சேலஞ்சர்- HMS Challenger

02.சந்திரனின் மேற்பரப்பை துல்லியமாக புகைப்படம் எடுத்த முதல் விண்கலம் எது?

அமெரிக்கா-லூனார் ஆர்பிட்டர் 1 

America -Lunar Orbiter 1

English words :

Cascade - waterfall

Studious hardworking

தமிழ் இலக்கணம் :

இரண்டு வட மொழிச் சொற்கள் சேர்ந்து ஒரு சொல் வரும் போது

வல்லினம் மிகாது

தேசம் + பிதா = தேசபிதா

> ஆனால் முதல் எழுத்து வடமொழி சொல்லாக இருந்து அடுத்த சொல்

தமிழ் சொல்லாக இருந்தால் வல்லினம் மிகும்

தேச + தந்தை = தேசத் தந்தை.

தேசம் வடமொழிச் சொல். தந்தை தமிழ் சொல்

அறிவியல் களஞ்சியம் :

1970 ஆம் ஆண்டில் அமெரிக்க ஏவுகணை விபத்துக்குள்ளான போது 'மௌன மண்டலத்தைப்' பற்றிய ஆராய்ச்சி தொடங்கியது. விசாரணைக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க விமானப்படை குழு, ஜிபிஎஸ் கருவிகள் உட்பட அனைத்து மின்னணு உபகரணங்களும் செயலிழந்திருந்ததை கண்டது. இதனால் அந்த குழு இதற்கு 'மௌன மண்டலம்' என்று பெயரிட்டது.

பிப்ரவரி 04 -வீரமாமுனிவர் அவர்களின் நினைவுநாள்

வீரமாமுனிவர் (Constanzo Beschi, பிறப்பு நவம்பர் 8, 1680 இறப்பு பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபையில் குருவானபின், 1710-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அதாவது அவரது 30-ஆவது அகவையில் வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது. சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.

பிப்ரவரி 04 உலகப் புற்றுநோய் நாள்

WORLD CANCER DAY

4 FEBRUARY

உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) என்பது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதற்கும் உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் பெப்ரவரி 4 ஆம் நாள் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். உலகப் புற்றுநோய் நாள் 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தை ஆதரிக்கும் நோக்கில் பன்னாட்டுப் புற்றுநோய் எதிர்ப்பு ஒன்றியம் (Union for International Cancer Control) என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் இறப்பு வீதம், மற்றும் புற்றுநோய்த் தாக்கத்தை 2020 ஆம் ஆண்டுக்குள் குறிப்பிடத்தக்களவு குறைத்தலே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.

நீதிக்கதை -திருக்குறள் கதைகள் - கர்வம் கொண்ட மயில்

குறள் :

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.

விளக்கம் :

மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

கதை :

ஒரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது. அந்த மயிலுக்குத் தன் அழகை எண்ணி அதிக பெருமை. ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையைக் காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ,மயிலே இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னைத் தேடி வர வேண்டும்.

ஆனால் அந்த குயிலைப் பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு என்றது.

இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது. அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள்.

நீதி : தனக்கு எல்லாம் தெரியும் என்று பெருமை கொண்டு காரியம் செய்தால் அவமானமே மிஞ்சும்.

இன்றைய செய்திகள் 04.02.2026

* செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம் கட்டவும், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் அரசு ரூ.12 கோடி நிதி அறிவித்துள்ளது.

* இந்தியாவில் 5 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்டுள்ள 2ம் & 3-ம் நிலை நகரங்கள் அனைத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

* இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள உத்தர்காஷி, சாமோலி, ருத்ரப்ரயாக், பித்தோராகர், பாகேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் (6 வெற்றி, 2 தோல்வி) பிடித்த ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Today's Headlines - 04.02.2026

* The government has announced a fund of Rs. 12 crore for the construction of operating theatres in hospitals and the purchase of medical equipment for Chengalpattu District, Madurantakam government hospital.

* The Government of India is planning to improve infrastructure facilities in all Tier 2 & 3 cities in India with a population of more than 5 lakhs..

* Avalanche warnings have been issued for the cities of Uttarkashi, Chamoli, Rudraprayag, Pithoragarh, and Bageshwar in the Indian state of Uttarakhand.

SPORTS NEWS

The 4th Women's Premier League (WPL) 20-over cricket match between 5 teams is underway in Vadodara, Gujarat. The Smriti Mandhana-led Royal Challengers Bangalore team, which finished first with 12 points (6 wins, 2 losses) at the end of the league round, advanced directly to the final.

Prepared by

Covai women ICT_போதிமரம்

தமிழ்த்துகள்

Blog Archive