பத்தாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 10
விடைக்குறிப்பு
கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
வினாக்கள்
1.கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம் எந்த நிகழ்வைக் குறிக்கிறது?
புத்தகத் திருவிழா
2. புத்தகத் திருவிழா எங்கு நடைபெறுகிறது?
சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
3.புத்தகத்திருவிழா எத்தனை நாள்கள் நடைபெறுவதாக விளம்பரம் குறிப்பிடுகிறது?
10 நாள்கள்.
4.புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைப்பவர் யார்? எப்போது?
முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
5.புத்தகத் திருவிழா நடைபெறும் நாள்களில் மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்வுகள் யாவை?
நாள்தோறும் மாலை 6 மணிக்குப் புதிய புத்தகங்கள் வெளியீடும் சிறப்புப் பேச்சாளர்களின் உரையும் இடம் பெறும்.
6.புத்தகம் படிப்போம் புதியன அறிவோம் - என்பது போன்ற விழிப்புணர்வுத் தொடர்கள் இரண்டினை எழுதுக.
விழிப்புணர்வுத் தொடர்கள்
1.புத்தகம் வாசிப்போம்,
புதுஉலகை நேசிப்போம்.
2.புத்தகம் படிப்போம்,
புதுஅறிவு பெறுவோம்.