ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு – 6
பாடம் – தமிழ்
பருவம் 1
இயல் 1
தலைப்பு – தமிழ்க்கும்மி
1.கற்றல் விளைவு
தமிழ் மொழியின் இனிமையை உணர்ந்து போற்றும் திறன் பெறுதல்.
2.உணர்தல்
கும்மியில் தமிழைப் போற்றிப்பாடி தமிழின் பெருமையை உணர்தல்.
3.முன்னறிவு
கும்மி குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
மாணவர்கள்
அறிந்த தமிழின் சிறப்பைக் கூறும் பாடலைக் கூறச் செய்தல்.
4.விதைநெல்
பெருஞ்சித்திரனார் இயற்றிய கனிச்சாறு நூலில் உள்ள தமிழ்க்கும்மி பாடல்.
5.விதைத்தல்
தமிழ் நூறாண்டுகளைக்
கண்டது, நூல்கள் பல கொண்டது. மாற்றத்தால் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி. பொய்யை
அகற்றும், அறியாமை நீக்கும், இன்பம் தரும், உண்மை ஊட்டும், அறம் தரும், உலகம்
சிறக்க வழி காட்டும் என்பதை மாணவர்களுக்கு விளக்குதல்.
தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
6.கருத்துப்புனைவு
7.கருத்துத்தூவானம்
தமிழ்க்கும்மி பாடலை இசையுடன் மாணவர்களைப் பாடச் செய்தல்.
தமிழின்
சிறப்புகளை அறிந்து வரல்.
8.விளைச்சல்
தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
பாவலரேறு
என அழைக்கப்படுபவர் யார்?
தமிழ்க்கும்மி
பாடலின்வழி நீ அறிந்தவற்றை உன் சொந்த நடையில் எழுதுக.
பொருள்
கூறுக.
மேதினி,
ஊழி, ஆழிப்பெருக்கு.
தமிழ்மொழி
எவ்வாறு அறியாமையை அகற்றும்?
9.சங்கிலிப்பிணைப்பு
பெருஞ்சித்திரனார் பற்றிய குறிப்புகளை அறிதல்.
தமிழின்
பெருமைகளைத் தொகுத்தல்.