ஊர் - திருவெஃகா
மாவட்டம் - காஞ்சிபுரம்
பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார் ஆவார்
பெயர்க்காரணம்
காஞ்சிபுரத்தில் பொற்றாமரைப் பொய்கையில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனப் பெயர் பெற்றார்.
பாஞ்சஜன்ய அம்சம்
சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஆறு ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவக் கொள்கை.
இதன்படி பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் புனித சங்கின் அம்சம் ஆவார்.
இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது.
முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர்.